Categories: Cinema News latest news

இது சுயசரிதை இல்ல.. பயசரிதை!.. பிரஸ்ஸருக்கு பயந்து 6 மாசம் சைலண்ட் மோடுக்கு போகும் ரஜினி?!…

Rajinikanth: ரசிகர்களால் சூப்பர்ஸ்டார் என அழைக்கப்படுபவர் ரஜினிகாந்த். 50 வருடங்களாக சினிமாவில் நடித்து வருகிறார். சூப்பர்ஸ்டார் என்கிற பட்டம் தன்னை விட்டு விஜயிடம் போய்விடுமோ என பயந்து எப்படியாவது ஒரு மெகா ஹிட் படத்தை கொடுக்க வேண்டும் என பல வருடங்களாக போராடி வருகிறார். ஆனால், பாபா, லிங்கா, குசேலன், தர்பார், அண்ணாத்த போன்ற படங்கள் பாக்ஸ் ஆபிசில் ஹிட் அடிக்கவில்லை.

இடையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் நடித்த ஜெயிலர் படம் மட்டுமே சூப்பர் ஹிட் அடித்தது. வேட்டையன் படத்துக்கு பின் லோகேஷின் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்தார். இது லோகேஷின் வழக்கமான ஸ்டைலில் ஒரு பக்கா கேங்ஸ்டர் படமாக உருவாகியிருக்கிறது. பேன் இண்டியா படம் என்பதால் உபேந்திரா, நாகார்ஜுனா, சௌபின் சாஹிர் போன்றவற்றை நடிக்க வைத்திருக்கிறார்கள்.

அதோடு, ரஜினியோடு நடிக்கமாட்டேன் என 30 வருடங்களுக்கும் மேல் சொல்லிக்கொண்டிருந்த சத்யராஜ் இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை முடித்துவிட்டு ஜெயிலர் 2 படத்தில் நடிக்கப்போனார் ரஜினி. இந்த படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கி வரும் படம் இது.

இந்த படத்திற்கு பின் ரஜினி 6 மாசம் சினிமாவுக்கு இடைவெளி விட திட்டமிட்டிருகிறாராம். அனேகமாக அவர் சுயசரிதை எழுத போகிறார் என்கிறார்கள். சுயசரிதை என்றால் அப்படியே உண்மையை சொல்லவேண்டும். ஆனால், ரஜினி கழுவுற மீனில் நழுவுற மீன். யாரையும் பகைத்துக்கொள்ளமாட்டார். எனவே, சுயசரிதை பற்றிய பேச்சு வந்த போதெல்லாம் வேண்டாம் என சொல்லி வந்த ரஜினி இப்போது இதை துவங்குவதற்கு காரணம் இருக்கிறது என்கிறார்கள்.

உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் ரஜினியை வைத்து படம் தயாரிக்க பல வருடங்களாக முயற்சி செய்து வருகிறது. இந்த நிறுவனத்தில் தான் நடித்தால் தனக்கு அரசியல் சாயம் பூசிவிடுவார்கள் என ரஜினி கால்ஷீட் கொடுக்கவே இல்லை. ஜெயிலர் 2-வுக்கு பின் ரஜினியின் கால்ஷீட்டை எப்படியும் வாங்கிவிடுவது என்கிற முடிவில் ரெட் ஜெயண்ட் நிறுவனம் அழுத்தம் கொடுப்பதாக சொல்லப்படுகிறது. அவர்களிடமிருந்து தப்பிக்கவே ‘சுயசரிதை எழுதப் போகிறேன்’ என்கிற பெயரில் ரஜினி 6 மாதம் சைலண்ட் மோடுக்கு போகப்போகிறார் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.

ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில மாதங்கள் இருக்கிறது. ரஜினி பிரேக் எடுத்தால் 2026 பிப்ரவரியை தாண்டிவிடும். அப்போது அவர்கள் தேர்தல் பணிகளில் அவர் பிஸி ஆகிவிடுவார்கள் என கணக்குப் போடுகிறாராம் தலீவர். அப்படியெனில் இது சுயசரிதை இல்லை. பயசரிதை என சொல்லி சிரிக்கிறார்கள் சிலர்.

Published by
சிவா