4 நாளில் இத்தனை கோடியா? வேட்டையன் படத்தின் அதிகாரப்பூர்வ வசூல் விவரம்…

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:37:23  )

Vettaiyan: ரஜினி நடிப்பில் வெளியான வேட்டையன் திரைப்படத்தின் வசூல் விவரம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை லைகா நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.

டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் வேட்டையன். படத்தில் அமிதாப்பச்சன், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, ஃபகத் பாசில் உள்ளிட்ட மல்ட்டி ஸ்டார் நடித்திருந்தனர். ஜெய்லர் திரைப்படத்தை தொடர்ந்து அனிருத் இப்படத்திற்கு இசையமைப்பு செய்திருந்தார்.

இப்படத்திலும் ரஜினிகாந்த் போலீஸ் வேடம் ஏற்றிருக்கிறார். மனித உரிமை நீதிபதியாக அமிதாப்பச்சனும், போலீஸ் வேடத்தில் ரஜினிகாந்த் நேருக்கு நேர் மோதிக் கொள்ளும் வித்தியாசமான கதையாக இப்படம் அமைந்துள்ளது. மேலும் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் ஆன ரஜினிகாந்தினை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

வில்லனாக ராணா டகுபதி இரண்டாம் பகுதியில் இருந்து வந்தாலும் தன்னுடைய நடிப்பால் ரசிகர்களை கவர முயற்சி செய்திருக்கிறார். அவருக்கு பெரிய அளவில் காட்சிகள் இல்லை என்றாலும் தன்னுடைய நடிப்பால் அதை பெரிய அளவில் காட்டிக் கொள்ளாமல் பார்த்திருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் இப்படத்தில் மஞ்சு வாரியருக்கு பெரிய அளவிலான பங்கு இல்லை என்பது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. ஆனால் பகத் பாசில் சின்ன ரோலில் வந்தாலும் ரசிகர்களிடம் தன்னுடைய நடிப்பால் கவர்ந்து தனி இடத்தை பிடித்துவிட்டார் என்று கூறவேண்டும். இப்படம் அக்டோபர் பத்தாம் தேதி வெளியானது.

முதல் நாளில் இருந்தே படத்திற்கான வரவேற்பு ரசிகர்களிடம் அதிகமாகவே இருந்தது. இருந்தும், அடுத்தடுத்த நாட்களில் படத்தின் கதை ரசிகர்களுக்கு பெரிய அளவில் பிடித்தமாக அமையவில்லை என்பதால் வசூல் குறைய தொடங்கியதாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் 4 நாட்கள் முடிவில் வசூல் நூறு கோடியை தாண்டி இருக்கும் என பலர் கணித்துக் கொண்டிருந்த நிலையில் லைக்கா நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அவர்கள் வெளியீட்டுள்ள பதிவில் உலக அளவில் இப்படம் 240 கோடியை தாண்டி இருப்பதாக தெரிவித்துள்ளனர். இது தற்போது ரசிகர்களிடம் வைரலாக பரவி வருகிறது.

Next Story