அந்த நடிகர் டாப்பு… ரஜினி வீக்குதான்… என்ன ஞானவேல் பொசுக்குனு இப்படி சொல்லிட்டீங்க…

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:39:52  )

Rajinikanth: வேட்டையன் திரைப்படத்தின் ரிலீஸ் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் இயக்குனர் டி ஜே ஞானவேல் கொடுத்திருக்கும் பேட்டி இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

லைகா நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் வேட்டையன் திரைப்படத்தினை டிஜே ஞானவேல் இயக்கி வருகிறார். ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், ராணா டகுபதி, பகத் பாசில், மஞ்சு வாரியர், துஷாரா விஜயம், ரித்திகா சிங் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

ரஜினிகாந்த் கமர்சியல் நாயகன். அவரை வைத்து ஞானவேல் எப்படி ஒரு படத்தை இயக்கப் போகிறார் என பல சந்தேகம் ரசிகர்களிடம் இருக்கிறது. இப்படம் தொடங்குவதற்கு முன்னரே ரஜினிகாந்திற்கும் இதே பிரச்சனை இருந்ததாக கூறப்படுகிறது. இருந்தும் அவர் கதை மீது உள்ள நம்பிக்கையால் படத்தினை ஒப்புக் கொண்டிருக்கிறார்.

இப்படத்தில் என்கவுண்டர் சம்பந்தப்பட்ட கதை என முதலில் கூறப்பட்டது. தற்போது இப்படத்தில் கல்வி சார்ந்த பிரச்சனையும் இடம் பெற்று இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. டிக்கெட் விற்பனையும் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக வசூல் செய்து வருகிறது.

இந்நிலையில் இயக்குனர் டிஜே ஞானவேல் அளித்த பேட்டியில், ரஜினியுடன் பணியாற்றிய அனுபவம் குறித்து பேசி இருக்கிறார். அப்போது அவர் பேசும்போது, அமிதாப்பச்சன் இந்த விஷயத்தில் முதல் பெஞ்ச் மாணவன் போன்றவர். ஆனால் ரஜினிகாந்த் கடைசி பெஞ்சில் அமர்ந்திருக்கும் மாணவன் போலதான்.

ஷூட்டிங் நடக்கும் போது அமிதாப் சார் அடுத்த நாளுக்கான ஸ்கிரிப்ட் பேப்பரை வாங்கிக் கொண்டுதான் வீட்டிற்கு செல்லுவார். நாளைக்கு ஷூட்டிங்கின் காட்சிகளை உட்கார்ந்து அதில் விளக்கத்தை கேட்டு அவர் என்ன செய்ய வேண்டும் என எல்லாத்தையும் கேட்டு விட்டு தான் அங்கு இருந்து நகர்வார்.

ஆனால் ரஜினிகாந்த் சாரை பொறுத்தவரை ஷூட்டிங்கில் பார்த்துக் கொள்ளலாம் என கூறி அங்கிருந்து சென்று விடுவார் என ஞானவேல் சிரித்துக் கொண்டே சொல்லியிருக்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Next Story