மழை விட்டாச்சு!.. மீண்டும் பிக்கப் ஆகும் வேட்டையன்!.. ரஜினிக்காக ரெட் அலர்ட்டே ஒதுங்கிடுச்சே!..

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:36:31  )

ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த அக்டோபர் 10ம் தேதி வெளியான வேட்டையன் திரைப்படம் முதல் 4 நாட்களில் அதிக வசூலை ஈட்டியதாக லைகா நிறுவனம் போஸ்டர் வெளியிட்டு வெற்றிக் கொண்டாட்டத்தை கொண்டாடி முடித்த நிலையில், தமிழ்நாட்டில் திடீரென கனமழை பாதிப்பு தொடங்கியது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் என பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில், கடந்த திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை மழை அடி வெளுத்தது. வேட்டையன் வசூலுக்கும் மொத்தமாக மழை வேட்டு வைத்து விட்டது. சுமார் 5 நாட்கள் மழை பெய்யும் என்றும் நேற்று மீண்டும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது. ஆனால், ரஜினிகாந்த் மேஜிக்கோ என்னவோ தெரியவில்லை. வானிலை அறிக்கையே பொய்யாக போய் அப்படியே ரெட் அலர்ட்டுக்கான மழை ஆந்திராவை நோக்கி நகர்ந்து விட்டது.

நேற்று சென்னையில் மழை பாதிப்பு முற்றிலும் குறைந்த நிலையில், ரஜினிகாந்த் ரசிகர்கள் மீண்டும் திரையரங்குகளுக்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர். மீண்டும் வேட்டையன் திரைப்படம் வசூலில் பிக்கப் ஆகும் என்றும் நாளை வெளியாகும் படங்களுடன் போட்டிப் போட்டு இந்த வாரம் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையும் வேட்டையன் வசூல் வேட்டையாடும் என்கின்றனர்.

ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள வேட்டையன் படத்தில் பல வருடங்களுக்குப் பிறகு அமிதாப் பச்சன் இணைந்து நடித்துள்ளார். அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான முதல் தமிழ் படமும் வேட்டையன் தான். ராணா டகுபதி, ஃபகத் ஃபாசில், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், அசல் கோலார், ரோகிணி, அபிராமி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

இதுவரை வேட்டையன் திரைப்படம் உலகளவில் 260 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வாரம் வேட்டையன் திரைப்படம் 300 கோடி வசூலை கடக்கும் என்கின்றனர்.

Next Story