அடுத்த ஆட்டத்தை தொடங்கியாச்சு! ‘கூலி’ படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் சன்பிக்சர்ஸ் வெளியிட்ட பதிவு
இன்று ஐதராபாத்தில் ரஜினி நடிக்கும் கூலி படத்தின் படப்பிடிப்பை தொடங்கியிருப்பதாக தயாரிப்பு நிறுவனம் சன்பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக தன்னுடைய இணையதள பக்கத்தில் பகிர்ந்திருக்கிறது. லோகேஷ் இயக்கும் கூலி படத்தின் படப்பிடிப்பிற்காக நேற்றே ரஜினி சென்னையில் இருந்து ஐதராபாத்திற்கு விமானம் மூலமாக சென்றார். அது சம்பந்தமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்த நிலையில் படத்தின் படப்பிடிப்பு இன்று ஆரம்பமானது என சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே இந்த படத்தில் கமல் மகள் ஸ்ருதிஹாசனும் நடிக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியானது. சொன்னதை போலவே ஸ்ருதிஹாசனும் ஐதராபாத்துக்காக படப்பிடிப்பிற்காக சென்றுள்ளாராம்.
ஐதராபாத்தில் இருக்கும் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் 35 நாள்கள் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டிருக்கிறார்களாம். ரஜினியின் நடிப்பில் அனைவரும் எதிர்பார்க்கும் திரைப்படம் வேட்டையன். இந்தப் படத்தை ஜெய்பீம் இயக்குனர் ஞானவேல் இயக்கியிருக்கிறார். படம் தீபாவளி அன்று ரிலீஸ் என்று சொல்லப்படுகிறது. ரஜினி நடிக்கும்171 வது படம்தான் கூலி.
ஏற்கனவே விக்ரம் படம் ரிலீஸானதுமே லோகேஷுடன் இணைந்து படத்தில் பணியாற்ற வேண்டும் என ரஜினி விரும்பினார். அது இப்போதுதான் நடந்திருக்கிறது. ஒரு பக்கா ஆக்ஷன் கலந்த படமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ரஜினியின் படங்களையே பார்த்துவளர்ந்த லோகேஷ் ரஜினிக்காக ஒரு தரமான சம்பவத்தை பண்ண மாட்டாரா என்ன? பொறுத்திருந்து பார்ப்போம்.
- Tags
- r