Amaran: கமல் சார் அப்படின்னு யார் சொன்னது?!.. எல்லாமே பொய்!.. கொந்தளிக்கும் அமரன் பட இயக்குனர்..

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:29:15  )

Amaran: நடிகராக இருந்து கதாசிரியர், இயக்குனர், தயாரிப்பாளர் என பல அவதாரங்களை எடுத்தவர் கமல்ஹாசன். சினிமாவில் மீது கொண்ட மோகத்தில் அதன் எல்லா துறைகளையும் கற்றுக்கொண்டவர். 5 வயது முதல் நடிக்க துவங்கிய கமல் 64 வருடங்களாக தொடர்ந்து நடித்து வருகிறார்.

தற்போதுள்ள சினிமா பிரபலங்களில் கமல் போல அனுபவம் கொண்ட ஒரு நடிகர் யாருமில்லை என்றே சொல்லலாம். கமல் தனது 100வது படமான ராஜபார்வை படத்தை உருவாக்கியபோது ராஜ்கமல் பிலிம்ஸ் என்கிற நிறுவனத்தை துவங்கி அப்படத்தை அவரே தயாரித்தார்.

அதன்பின் இப்போது கிட்டத்தட்ட 50 படங்களை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் நெருங்கிவிட்டது. இதில், பெரும்பாலும் கமலே ஹீரோவாக நடித்திருந்தாலும் மற்ற ஹீரோக்களும் நடித்திருக்கிறார்கள். சத்தியராஜை வைத்தும் படம் தயாரித்திருக்கிறார் கமல். ரேவதி, ரோகிணி, ஊர்வசி நடிப்பில் வெளிவந்த மகளிர் மட்டும் படத்தையும் தயாரித்திருக்கிறார்.

கமலை பற்றி பொதுவாக ஒன்று சொல்வார்கள். அவரிடம் ஒரு இயக்குனர் கதை சொல்லப்போனால் அதில் தலையிட்டு மொத்த கதையையே மாற்றிவிடுவார். லோகேஷ் கனகராஜ் கமலிடம் ஒரு கதை சொன்னார். ஆனால், கமல் அதை மாற்றி நிறைய மாற்றங்கள் சொல்லி உருவான படம்தான் விக்ரம் என சிலர் சொன்னார்கள்.

கமலை வைத்து ஹெச்.வினோத் ஒரு படத்தை இயக்குவதாக செய்திகள் வெளியான போதும் இப்படித்தான் சொன்னார்கள். ஆனால், இதை அமரன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி மறுத்திருக்கிறார். ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம்தான் அமரன் படத்தை தயாரித்திருக்கிறது.

ஊடகம் ஒன்றில் பேசிய ராஜ்குமார் ‘கமல் சார் கதையில் தலையிடுவார் என்றெல்லாம் இங்கே சொல்லப்படுகிறது. ஆனால், ஒருநாளும் அவர் அதை செய்ததே இல்லை. உண்மையில் வேறொரு தயாரிப்பாளர்தான் இப்படத்தை தயாரிப்பதாக இருந்தது. கமல் சார் இப்படத்தை வெளியிட்டால் நன்றாக இருக்கும் நினைத்தோம். ஆனால், கதை பிடித்ததால் அவரே எல்லாம் செய்து கொடுத்தார். அவர் இல்லையென்றால் அமரன் படம் இவ்வளவு தரத்துடன் வெளியே வந்திருக்காது. காஷ்மீரில் சில இடங்களில் படமெடுக்க அனுமதியே இல்லை. ஆனால், கமல் சார் அனுமதி வாங்கி கொடுத்தார். நான் கேட்டது எல்லாம் கிடைத்தது. பழகுவதற்கும், அணுகுவதற்கும் அவர் மிகவும் எளிமையானவர்’ என சொல்லி இருக்கிறார்.

Next Story