கமல் தயாரிப்பில் ரஜினி படம்... மெகா பிளானுக்குப் பேச்சுவார்த்தை..! பிரபலம் உறுதி

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:33:23  )

கமலும் ரஜினியும் ஏன் பிரிந்தார்கள்? மீண்டும் அவர்கள் இணைந்து நடிப்பார்களா என்பது குறித்து பிரபல இயக்குனர் ராசி அழகப்பன் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

கமலும், ரஜினியும் ஆரம்பத்தில் பல படங்களில் இணைந்து நடித்துள்ளார்கள். இருவரில் கமல் சீனியர் என்பதால் அவர் ஹீரோவாகவும், ரஜினி அவரது படங்களில் வில்லனாகவும் நடித்தார். நினைத்தாலே இனிக்கும், அலாவுதீனும் அற்புத விளக்கும் படங்களுடன் இருவரும் தனித்தனியாகப் பிரிவது என முடிவு செய்தனர்

அநேகமாக கமல் தான் நாம தனித்தனியாக நடிக்கிறது தான் நல்லதுன்னு சொல்லிருப்பாரு. அப்புறம் ரஜினி தனக்கே உரிய ஸ்டைலுடன் தனியாக நடிக்க ஆரம்பித்தார். கமல் தனியாக தன்னோட பாணியில் நடிக்கத் தொடங்கினார். ரஜினிக்கு பாஸ்கர் பைரவி படத்தில் இருந்து அவரை சூப்பர்ஸ்டாராக உயர்த்தினார்.

அதே நேரம் கமலுக்கு ஆர்.சி.சக்தி போன்றவர்கள் புதுமையான படங்களைக் கொடுத்தனர். இரண்டு பேருக்கும் எஸ்.பி.முத்துராமன் தரமான படங்களைக் கொடுத்தார். அதே போல ராஜசேகரும் ரஜினிக்குப் படிக்காதவன், கமலுக்கு விக்ரம் என மாபெரும் சூப்பர்ஹிட் படங்களைக் கொடுத்தார்.

நாயகன் படத்தைப் பார்த்துவிட்டு ரஜினி இவருக்கு மட்டும் எப்படிப் படங்கள் கிடைக்குதுன்னு ஆச்சரியப்பட்டு மனம் திறந்து கமலைப் பாராட்டினாராம். அதே போல கமல் ரஜினியின் தர்மத்தின் தலைவன், நல்லவனுக்கு நல்லவன், கைகொடுக்கும் கை ஆகிய படங்களைப் பார்த்து விட்டு நல்ல உணர்வுப்பூர்வமாகப் பண்ணிருக்கீங்கன்னு மனம் திறந்து பாராட்டினாராம்.

'நான் வெறும் குணச்சித்திர நடிகர் மட்டும் கிடையாது'ன்னு கமல் பண்ணின படம் தான் சகலகலா வல்லவன். அது அவரை வேற லெவலுக்குக் கொண்டு போனது. பாலசந்தர் இருவரையும் இணைத்து மீண்டும் படம் எடுக்கணும்னு நினைச்சாராம். ஆனா அந்தத் திட்டம் சில காரணங்களால் கைகூடவில்லை.

லோகேஷ் கனகராஜ் கூட கமல், ரஜினியை இணைத்து படம் பண்ணலாம். அதற்கான முயற்சிகள் கூட நடந்தததாகக் கேள்விப்படுகிறேன். ரஜினிகாந்தை ராஜ்கமல் பிலிம்ஸில் வைத்து படம் எடுக்கும் திட்டம் சில காலங்களில் வரும். அதுல கமலும் நடிப்பார். அந்தத் திட்டம் இருக்கிறது. அதை மகேந்திரனும், கமலும் சேர்ந்து தயாரிப்பார்கள் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story