More
Categories: Cinema News

எடுறா வண்டிய… கூலி படத்து சூட்டிங்கிற்கு தலைவர் கிளம்பியாச்சு…!

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த ரஜினி அடுத்து சூட்டிங் எப்போ போவாருனனு எல்லோருக்கும் கேள்வியா இருந்தது.

கூலி படத்துல ரஜினி நடிக்கும்போது தான் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தார். அதன்பிறகு அவருக்கு மருத்துவர்கள் 2 வாரங்களுக்கு ஓய்வு எடுக்கவும் அறிவுறுத்தினார்கள்.

Advertising
Advertising

அதனைத் தொடர்ந்து மறுபடியும் தலைவர கூலி படப்பிடிப்பில் எப்போது கலந்து கொள்வார்னு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவியது. அதற்கு இப்போது விடை கிடைத்துள்ளது. இது குறித்து லோகேஷ் கனகராஜிடம் பல கேள்விகள் முன்வைக்கப்படுது.

எந்தப் படமா இருந்தாலும் 6 மாசத்துக்குள்ள சூட்டிங்கை முடிச்சிடணும்கறது என்னோட டார்கெட்டா இருக்கும். ஏன்னா அந்தப் படத்து மேல உள்ள ஒரு ஆர்வம் எனக்குக் குறையதுக்குள்ள அதை கம்ப்ளீட் பண்ணிடணும்னு பார்ப்பேன்.

இதுவரைக்கும் உள்ள எல்லாப் படங்களுக்கும் அப்படித் தான் இருந்துருக்கு. கூலி படத்துக்கும் அப்படிங்கற டார்கெட்ட வச்சித் தான் ஓடிக்கிட்டு இருக்கேன். அதுக்கு ஏத்த மாதிரி தான் ரஜினி சாரும் அவரோட உடல்நலம் பற்றி சொல்லி இருந்தாரு.

அதனால தான் அவரோட சூட்டிங்கையும் நாங்க முதல்லயே முடிச்சிருந்தோம். இப்போ அக்டோபர் 16ம் தேதி மறுபடியும் சூட்டிங்கில இணைய இருக்காரு என்கிறார் லோகேஷ் கனகராஜ்.

அதுபோல நிறைய வன்முறை, போதைப் பொருள் காட்சிகளாக உங்க படத்துல இருக்குன்னும் ரசிகர் ஒருவர் கேள்வி கேட்குறாங்க. அதுக்கு 5 வருஷமாகும். மத்த படங்களுக்கும் அட்வான்ஸ் வாங்கிட்டேன். அதை முடிக்கறதுக்கு இன்னும் 5 வருஷமாகும்னும் கூலா சொல்லிட்டாரு. அதே மாதிரி நான் முழுநீள ஆக்ஷன் படம் எடுக்கணும்னு ஆசைப்பட்டேன்.

ஆனா அப்படி எல்லாம் ஒரு படம் எடுத்தா சென்சார்ல மிகப்பெரிய பிரச்சனை இருக்கும். கைதி படத்தின் போது தான் எனக்கே புரிஞ்சது. இந்தியாவுல இந்த மாதிரி ஆக்ஷன் படம் எடுக்குறது கஷ்டம் தான். அதனால நான் விரும்புற ஆக்ஷன் படத்தை எடுக்க முடியுமான்னே தெரியலன்னும் சொல்லி இருக்காரு லோகேஷ்.

அதே போல லியோ படத்துக்கு முதல்ல பார்த்திபன்னு தான் பேரு வைக்கிறதா இருந்தாராம். அப்புறம் தான் லியோன்னு கெத்தா வச்சாராம். அதோட 2ம் பாகம் எடுத்தா பார்த்திபன்னு வைக்கிறதாகவும் லோகேஷ் தெரிவித்துள்ளார்.

Published by
ராம் சுதன்