லிங்கா படப்பிடிப்பில் ரஜினிக்கு வந்த திடீர் படபடப்பு... இளவரசுவிடம் சொன்ன அந்த விஷயம்.!

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:40:30  )

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ரொம்ப எளிமையானவர். கேரவன் வந்த பிறகு சின்ன சின்ன சுள்ளான் நடிகர்கள் எல்லாம் ஷாட் முடிஞ்ச பிறகு உள்ளே போய் உட்கார்ந்துகிறாங்க. ஆனா ரஜினி அப்படி கிடையாது. இன்னைக்கு வரைக்கும் கூலி படப்பிடிப்பில் கூட வெயில்ல குடையைப் பிடிச்சிக்கிட்டு உட்கார்ந்துடுவாராம்.

விஜயகாந்து கூட கேரவன் உள்ளே போக மாட்டாரு. ஏன்யா அந்த வண்டியில போய் உட்கார்றது? பத்திரிகையாளரை எல்லாம் பார்க்கணும். சேரை எடுத்து வெளியில போடுய்யான்னு சொல்வாராம். இது தான் பழைய நடிகர்கள். இது தான் எளிமை என்கிறார் பிரபல மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு. அவர் சொன்ன இன்னொரு தகவல் ஆச்சரியமாக இருந்தது. என்னன்னு பாருங்க.

சமீபத்தில் இளவரசு பேட்டி ஒண்ணு கொடுத்தாரு. லிங்கா படத்துல ரஜினி நடிச்சிருப்பாரு. மைசூர் பக்கத்துல ஒரு ஷாட் எடுக்கணும். காலைல இருந்தே அப்செட்ல இருந்தாரு. அப்போ தான் கேஎஸ்.ரவிக்குமார் வந்து சொன்னாரு. சாருக்கு எல்லாரும் வாழ்த்து சொல்லுங்க. ஏன்னா அபூர்வ ராகங்கள் படத்துல முதல் ஷாட் எடுத்ததே இங்க தான்.

மொத்தம் 43 வருஷமாகுதுன்னாரு. ஷாட் முடிஞ்சதும் எல்லாரும் கிளாப் பண்ணிருக்காங்க. ரஜினி இளவரசுக்கிட்ட வந்து சொன்ன விஷயம் இதுதான். அன்னைக்கு மொழி தெரியாம சென்னைக்கு சினிஜமா ஆர்வத்துல வந்துட்டேன். அப்போ கண்டக்டரா இருந்த போது தைச்ச சட்டையில மீதம் இருந்த காக்கித் துணியில ஒரு பை தைச்சி எடுத்துக்கிட்டேன்.

அதுல தான் துணியை எல்லாம் வச்சிக்கிட்டு வந்தேன். பிலிம் இன்ஸடிட்யூட்ல அப்ளை பண்ண வந்தேன். அங்க உள்ள பசங்க எல்லாம் காக்கி காக்கின்னு கிண்டல் பண்ணாங்க. நடிக்கறதுக்கான படிப்புல செலக்ட் ஆகிட்டேன். அப்புறம் வால்டாக்ஸ்ல ஒரு சின்ன இடத்துல 2 வேளை சாப்பாட்டோடு மாசம் 28 ரூபாய்க்குத் தங்க இடம் கிடைச்சது. அது ஒரு புகைக்கூண்டு பக்கம்.

பகல்ல அனல் பறக்கும். நைட் கொஞ்சம் படுத்துக்கலாம். அன்னைக்கு அவ்ளோ கஷ்டப்பட்டேன். இன்னைக்கு சூப்பர்ஸ்டார்ங்கற அளவுக்கு காலம் எங்கேயோ உருண்டு போச்சு. இந்த 44 வருஷம் எப்படி போச்சுன்னே தெரியலன்னு சொன்னாராம். அந்த நாள் இதுதான்னு எனக்கு தெரிந்தது. அதனால தான் எனக்குப் படபடப்பு வந்துடுச்சுன்னு ரஜினி சொன்னாராம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story