Connect with us

லிங்குசாமி இயக்கத்தில் நடிக்க ஆசைப்பட்ட ரஜினி… கதை சொல்லியும் ஓகே ஆகலையே!

latest news

லிங்குசாமி இயக்கத்தில் நடிக்க ஆசைப்பட்ட ரஜினி… கதை சொல்லியும் ஓகே ஆகலையே!

ரஜினியை வைத்து ஒரு படமாவது இயக்க மாட்டோமா என்று அத்தனை பேரும் தவம் கிடப்பார்கள். ஆனால் ரஜினியே சான்ஸ் கேட்டும் படத்தை இயக்கவில்லையே… அதென்னன்னு ஆச்சரியமாக இருக்கிறதா? வாங்க பார்க்கலாம்.

இன்றைய தலைமுறை வரை கதை கேட்குற ஒரே ஆளுன்னா அது ரஜினிதான். டூரிஸ்ட் ஃபேம்லி படம் பண்ணின டைரக்டர் ரஜினியோட பேரன் வயசு இருப்பான். அவனையும் கூப்பிட்டுப் பாராட்டி எனக்கு ஏதாவது கதை வச்சிருக்கியாப்பான்னு கேட்டாராம் ரஜினி. ரஜினிகாந்தின் கதை தேர்வு, இயக்குனர் மேல் உள்ள பார்வை மாறாததுக்கு காரணம் அவரது சினிமா ஆர்வம் தான்.

லோகேஷூம் லியோவில் விட்டதை கூலியில் பிடிக்கணும்னு தீவிரமாக உழைப்பைப் போட்டு வருகிறாராம். பாபா வரும்போது இயக்குனர் லிங்குசாமியின் ரன் படம் வெளியானது. அதற்கு முன்பே ஆனந்தம் படத்தைப் பார்த்து ரஜினி அவரைப் பாராட்டியுள்ளார்.

ரன் படத்தைப் பார்த்ததும் லிங்குசாமியைப் பார்த்துப் பாராட்டியுள்ளார். படத்தில் சீன் பை சீன் சொல்லி இயக்குனரைப் பாராட்ட மனுஷன் எந்தளவு ரசிச்சிருக்காருன்னு லிங்குசாமியே ஆச்சரியப்பட்டுப் போனாராம். ரொம்ப உற்சாகம் ஆகிவிட்டாராம். லிங்குசாமியே ரஜினியின் தீவிர ரசிகர்தானாம்.

தொடர்ந்து இப்போ யாரை வைத்து படம் பண்ணப் போறீங்கன்னு கேட்டுள்ளார் ரஜினி. ஜி படத்துக் கதை. அஜித்தை வைத்துப் பண்ணப்போறதா சொல்லிருக்காரு லிங்குசாமி. படம் ஃபைனலாச்சான்னு கேட்க இல்லைன்னு சொன்னாராம். நான் பண்ணினா எப்படி இருக்கும்னு கேட்டாராம் ரஜினி.

‘காலேஜ் ஸ்டூடண்ட் கதை… உங்களுக்கு செட்டாகாது’ன்னு சொல்லிருக்காரு. ‘நீங்க ஏன் காலேஜ் ஸ்டூடண்ட்னு சொல்றீங்க. ஒரு ஃபேக்டரி. அங்க ஒரு தொழிற்சங்கம். அங்க ஒரு எலெக்ஷன். அதுக்குள்ள அரசியல் கட்சி எல்லாம் உள்ளே சேருது’ன்னு அந்த நொடியில ஒரு கதையை டெவலப் பண்ணினாராம் ரஜினி. உடனே லிங்குசாமி ‘செட்டாகாது சார்’னு சொல்லிருக்காரு. ‘ஓகே ஓகே’ன்னு சொல்லிட்டாராம் ரஜினி. மேற்கண்ட தகவலை பிரபல மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top