அபூர்வ ரசிகரா இருப்பாரோ... ரஜினியோட நவராத்திரி கொலுவைப் பாருங்க.. செம மாஸா இருக்கே..!
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சினிமாவில் ஒருபக்கம் உச்சநட்சத்திரமாக இருந்தபோதும் மிகவும் எளிமையானவர். தன்னடக்கம் கொண்டவர். அன்பாகப் பழகக்கூடியவர். ஏகோபித்த ரசிகர்களைக் கொண்டவர். திரையில் அவர் தோன்றினால் ரசிகர்களுடைய கொண்டாட்டத்திற்கு அளவே இல்லை எனலாம். வயசானாலும் அந்த ஸ்டைலும் அழகும் மட்டும் மாறவே இல்லை என்ற டயலாக் யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ அது நம்ம சூப்பர்ஸ்டாருக்குக் கச்சிதமாகப் பொருந்துகிறது.
ஒரு பக்கம் சூப்பர்ஸ்டார் என்றால் இன்னொரு பக்கம் அவர் பெரிய ஆன்மிகவாதி. சினிமாவில் கூட அதனால் தான் ஸ்ரீராகவேந்திரர், பாபா, அருணாச்சலம் என ஆன்மிகப் படங்களையும் அவ்வப்போது தவறாமல் கொடுத்தார். ஒவ்வொரு படம் முடிந்த பின்னும் அவர் இமயமலை சென்று அங்கு தனக்கு நெருக்கமான ரிஷிகளை சந்திப்பதை வழக்கமாகக் கொண்டு இருந்ததும் அவரது ஆன்மிக ஈடுபாட்டைத் தான் குறிக்கிறது. இதில் அவரது ரசிகனும் விதிவிலக்கல்ல என்பதை நிரூபித்து விட்டார்.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நடிகர் ரஜினிகாந்தின் ஸ்டில்களை வைத்து நவராத்திரி கொலு வைத்துள்ளார் ரஜினி ரசிகர் ஒருவர். இந்தக் கொலுவில் ரஜினிகாந்த் முதன்முதலாக நடித்த அபூர்வ ராகங்கள் முதல் கூலி படம் வரையிலான சூப்பர் ஸ்டில்கள் இடம்பெற்றுள்ளன. ரஜினி வெறியன்டான்னு சொன்னால் மட்டும் போதாது. செய்தும் காட்ட வேண்டும் என்று நிரூபித்துள்ளாரோ இந்த ரசிகர் என்றே எண்ணத் தோன்றுகிறது.
அருள்மிகு ரஜினி கோவில் என்று கதவு திறக்கிறது. அதன்பிறகு பிஜிஎம் உடன் அவரது கொலுவை ஒவ்வொன்றாகக் காட்டுகிறார்கள். செம மாஸான படங்கள் அங்கு நம்மை மெய்சிலிர்க்க வைக்கின்றன.
இந்த வீடியோவில் ரசிகர் பற்றிய விவரங்கள் எதுவும் இல்லை. ஆனால் ஒவ்வொரு படங்களாக நாம் பார்க்கும்போது நமக்கே ஆச்சரியமாக இருக்கிறது. கொலுவில் இருப்பது போல வரிசையாக படிகள் உள்ளன. ரஜினி வீணையுடன் இருக்கும் ஸ்ரீராகவேந்திரர் படம் நம்மை வெகுவாகக் கவர்கிறது.
நவராத்திரி விழா நேற்று தொடங்கியது. இன்று 2ம் நாள். வீடுகளில் கொலு வைத்து அம்மனை வழிபடுவது வழக்கம். 10 நாள் களைகட்டும் இந்தத் திருவிழா அம்மனுக்கே உரித்தான விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த சமயத்தில் ரஜினியையேக் கடவுளாக்கி ரசிகர் வழிபட்டுள்ளது ஆச்சரியத்தைத் தருகிறது.
இதற்கான வீடியோ லிங்கைக் காண இங்கே சொடுக்குங்கள்.