2000 கோடி சொத்துக்கு அதிபதி.. ரம்பாவுக்காக புருஷன் இந்தளவா இறங்கணும்?

by ராம் சுதன் |

90 கள் காலகட்டத்தில் ஒரு கனவு கன்னியாக இருந்தவர் நடிகை ரம்பா. இன்றுவரை அவருக்கு என ஒரு தனி ரசிகர்கள் இருந்து வருகிறார்கள். திருமணம் குழந்தைகள் ஆன பிறகு ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் சினிமாவில் ரீ என்ட்ரி ஆகி இருக்கிறார் ரம்பா. அதற்கு முன்னதாக எந்த ஒரு ரியாலிட்டி ஷோவிலும் தெரியாத ரம்பா விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஜோடி ஆர் யூ ரெடி சீசன் 2வில் நடுவராக இருந்து வருகிறார்.

அந்த சீசனில் அவர் கலந்து கொண்டது ரசிகர்களுக்கு ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஏனெனில் திருமணம் ஆகி இத்தனை வருடங்கள் கழித்து மீண்டும் மீடியாவில் அவர் வந்திருப்பது ஒருவித சந்தோஷத்தை ரசிகர்களுக்கு ஏற்படுத்தி இருக்கிறது. ரம்பா என்றாலே அழகிய லைலா பாடல் தான் ஞாபகத்திற்கு வரும். ரம்பாவின் கணவர் இந்திரன் ஒரு பெரிய பிசினஸ்மேன்.

இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் இருக்கின்றனர். ரம்பாவை பற்றி இந்திரன் கூறும்பொழுது இத்தனை வருடங்கள் குழந்தைகளுக்காகவே அவர் வாழ்ந்து விட்டார். அவருக்காக ஒரு நாள் கூட வாழவில்லை. ஷூட்டிங் போனால் குழந்தைகளை கவனிக்க முடியாது என்ற ஒரு எண்ணத்தில் தான் இதுவரை அவர் படங்களில் நடிக்கவே இல்லை. எத்தனையோ வாய்ப்புகள் வந்தது. ஆனால் அது எல்லாவற்றையும் தன்னுடைய குழந்தைகளுக்காகவே அவர் விட்டுக் கொடுத்து விட்டார்.

இனிமேல் அவருக்கு பக்கபலமாக நானும் என் குழந்தைகளும் இருப்போம் என ஒரு பேட்டியில் கூறினார். இந்த நிலையில் மீண்டும் ஒரு படத்தில் ரீ என்ட்ரி ஆகிறார் ரம்பா. அந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது .அப்போது கலைப்புலி எஸ் தாணு அந்த விழாவிற்கு வருகை தந்து ரம்பாவை பற்றி சில விஷயங்களை கூறினார். 2000 கோடி சொத்துக்கு அதிபதி ரம்பா.

அவரை இந்த மேடையில் பார்க்கும் பொழுது கண்கள் மின்னுகின்றன. அவருடைய கணவர் இந்திரன் என்னை பார்க்க வந்திருந்தார். அப்போது ‘ரம்பா இத்தனை வருடங்களாக சினிமாவில் நடிக்காமலேயே இருந்தார். ஆனால் அவருக்குள் ஒரு எண்ணம் இருக்கிறது. ஏதாவது பண்ண வேண்டும். இப்படியே உட்கார்ந்தால் எப்படி என அவருக்கு தோன்றுகிறது. அதனால் அவருக்கு ஒரு நல்ல ரீ என்ட்ரி கொடுக்க வேண்டும்.

நீங்கள் தான் அதற்கு உதவி செய்ய வேண்டும்’ என கூறினாராம். அதற்கு தாணு இந்திரனிடம் ‘அதுக்காக நீ படத்தை தயாரித்து விடாதே. நான் பார்த்துக் கொள்கிறேன். வேறு பல கம்பெனி நிறுவனத்திடமும் ரம்பாவுக்காக நான் பேசுகிறேன்’ என தாணு கூறினாராம். இத்தனை கோடிக்கு அதிபதி என்றாலும் தன் மனைவிக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற அவர் கணவர் இந்திரனின் இந்த எண்ணம் பாராட்டுக்குரியதாக பார்க்கப்படுகிறது.

Next Story