சிவாஜி கணேசன் வீட்டை தொட முடியாது... புது விஷயம் சொல்லும் ராம்குமார்…

Sivaji Ganesan: துஷ்யந்த் ராம்குமார் வாங்கிய கடனுக்காக சிவாஜியின் வீட்டை ஜப்தி பண்ண கொடுக்கப்பட்ட உத்தரவு குறித்து தற்போது புது தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
சிவாஜி கணேசனின் பேரன் துஷ்யந்த் மற்றும் அவர் மனைவி அபிராமி ஈசன் ப்ரொடக்ஷன் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகின்றனர். அந்த நிறுவனத்தில் விஷ்ணு விஷால், நிவேதா பெத்துராஜ் நடிப்பில் உருவான ஜலஜலா கில்லாடி படத்தினை தயாரித்தனர்.
இப்படத்துக்கான பட்ஜெட்டுக்கு தனபாக்கியம் என்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்திடம் இருந்து 3 கோடியே 74 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் கடனாக வாங்கி அதை வருடத்திற்கு 30% வட்டியுடன் திருப்பி அடைப்பதாக ஒப்பந்தம் போட்டு இருக்கின்றனர்.
ஆனால் ஆண்டுகள் பல கடந்தும் அதை இன்னமும் திருப்பி செலுத்தவில்லை. இதனால் அந்த நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. கடன் தொகை 9 கோடியை தாண்டி விட ஜலஜலா கில்லாடி படத்தின் மொத்த உரிமையை தனபாக்கியம் நிறுவனத்திடம் முழுமையாக ஒப்படைக்க கடந்த ஆண்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அந்த படத்தை அவர்கள் விற்று அதிலிருந்து வரும் லாபத்திலிருந்து தங்களுடைய கடனை எடுத்துக் கொள்ளலாம் எனவும் கூறப்பட்டது. ஆனால் துஷ்யந்தின் நிறுவனம் படம் இன்னும் முடியவில்லை எனக் கூறி மாதங்களை கடத்தினர். இதைத்தொடர்ந்து தனபாக்கியம் நிறுவனம் மீண்டும் நீதிமன்றம் படியேறியது.
இந்த வழக்கின் தீர்ப்பில் தான் சிவாஜி வீட்டை ஜப்தி செய்ய வேண்டும் என அறிவிப்பு வெளியானது. தற்போது இந்த உத்தரவை எதிர்த்து ராம்குமார் அன்னை இல்லம் தன்னுடைய தம்பி பிரபு பெயரில் தான் இருக்கிறது. அதில் தனக்கும் தன்னுடைய மகன் துஷ்யத்திற்கும் உரிமை இல்லை என மன அளிக்க இருக்கிறார்.
இதற்கான மேல்முறையீடு மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தற்போது நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. இதைத் தொடர்ந்து ராம்குமார் தரப்பில் வீடு தங்களுடைய இல்லை என்ற மனுவை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது