Categories: Cinema News latest news

ரவி மோகன் வீட்டோட மாப்பிள்ளையா?… அமைதியாக இருப்பதே அவர் பாதுகாப்பு… ஆதங்கப்பட்ட ஆர்த்தி!

Aarti Ravi: தமிழ் முன்னணி நடிகர் ரவி மோகன் மற்றும் ஆர்த்தி ரவியின் விவாகரத்து சர்ச்சை தொடர்ந்து சிக்கலை சந்தித்து வரும் நிலையில் ரவி மோகனின் குற்றச்சாட்டுகளுக்கு அவர் மனைவி மீண்டும் விளக்கம் அளித்து ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார்.

நான் கட்டுப்படுத்தும் மனைவி எனச் சொல்லப்படுகிறது. என் கணவரை கெட்ட பழக்கத்தில் இருந்து காப்பாத்தவும், எங்கள் குடும்பத்தின் அமைதி சீர்குலையாமலும் இருக்க நான் கட்டுப்படுத்துவதாக இருந்தால் அப்படியே இருக்கட்டுமே.

தன் துணையின் நலனுக்காக எந்த ஒரு நல்ல மனைவியும் அப்படிதான் இருப்பாள். இருந்தும் நாங்க நல்ல ஜோடியாக வலம் வந்ததுக்கு எங்களுடைய சமூக வலைத்தள பக்கமே சாட்சி. ஒரு 6 அடி ஆள், ஒரு 5 அடி பெண்ணிடம் 15 வருஷம் “பிடியில்” இருந்தாரா?

பின்ன எதற்கு இத்தனை வருடம் காத்திருக்கணும். எங்களுடைய கல்யாண நாள், வீட்டு விழாக்களில் கலந்துக்கணும். அவர் பயத்தில் போகலை. செய்த தில்லுமுல்லு தெரிந்துவிடுமோ என்று கிளம்பினார். அவர் வீட்டோட மாப்பிள்ளையாக இருந்ததே இல்லை.

கோவிட்டில் எங்க பில்டிங்கில் இருந்து பாதுகாப்பு காரணத்திற்காக சில வாரத்தினை தவிர என் அம்மா வீட்டில் அவர் தங்கியதே இல்லை. என்னுடைய மாமனார் குடும்பத்துடன் இருந்தோம். நான் என் பிள்ளைகளை பகடைக்காயாக பயன்படுத்தியதே இல்லை.

கடந்த ஆண்டு அவர் என் மகன்களை நான்கு முறை மட்டுமே அவர் விருப்பத்துடன் பார்த்துள்ளார். அவர்கள் போனை நாங்கள் பிளாக் செய்யவில்லை. அவரிடம் உண்மையான அன்பு இருந்தால் எந்த பவுன்சராலும் அவரை தடுக்கவே முடியாது.

கார் விபத்தில் என் மகன்களுக்கு எதுவுமே நடக்கவில்லை. இன்சூரன்ஸ் வைத்து காரை பயன்படுத்த எண்ணிதான் அவர் கையெழுத்தை கேட்டோம். என்னுடைய மொத்த கேரியரையும் உங்கள் நலனுக்காக தொலைத்தேன். ஆனால் எல்லாம் முடிந்துவிட்டது. பணம் சம்மந்தப்பட்ட முடிவை இன்று வரை நாங்கள் இருவரும் சேர்ந்து தான் எடுத்திருக்கிறோம்.

அதற்கான ஆதாரங்களை கோர்ட்டில் சமர்பித்து இருக்கிறேன். எனக்கு ஆதரவாக இருந்த மீடியா மற்றும் நண்பர்களுக்கு நன்றி. நான் இந்த விஷயத்தில் தேவையில்லாமல் பேசவே கூடாது என நிஜமாகவே நினைத்தேன். 18 வருடமாக இருந்த உறவில் இருந்து மரியாதையுடன் விலகி இருக்கலாம்.

அவர் செய்த ஒரு விஷயத்துக்கு பொது மக்கள் முன் என்னை கேவலப்படுத்தி விட்டார். உண்மை தெரிந்த ஒரே நபர் என் கணவர். அவர் பேச மறுக்கிறார். ஏனென்றால், அமைதியே அவருக்கான பாதுகாப்பு. நான் அவருக்கு அமைதி கிடைக்க வேண்டிக்கொள்கிறேன். நான் வீழ்ந்தவள் இல்லை. நான் இங்கே நிமிர்ந்து நிற்கிறேன் என் பிள்ளைகள், என் குடும்பம், என் ஆதரவாளர்களின் முன்னிலையில். ஏனென்றால் என் உள்ளம் இன்னும் சட்டத்தின் மீது நம்பிக்கை வைக்கிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.

Published by
ராம் சுதன்