டைட்டிலே வேறலெவல்!. ரவி மோகனின் புது பட அறிவிப்பு!. இதுல அவரும் இருக்காராம்!…

Published on: August 8, 2025
---Advertisement---

Ravi Mohan: ஜெயம் படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் ரவி. ஜெயம் படம் ஹிட் ஆனதால் ஜெயம் ரவி என இவரை எல்லோரும் அழைக்க துவங்கினார்கள். துவக்கத்தில் அண்ணன் ராஜாவின் இயக்கத்தில் தெலுங்கு படங்களை தமிழில் ரீமேக் செய்து நடித்து வந்தார். ஒருகட்டத்தில் மற்ற இயக்குனர்களின் இயக்கத்திலும் நடித்து நடிப்பில் மெருகேறினார்.

அதிரி புதிரி ஹிட் இல்லை என்றாலும் ஜெயம் ரவியை வைத்து படமெடுத்தால் லாபம் என்பதே தயாரிப்பாளர்களின் மனநிலையாக இருக்கிறது. குறைவான பட்ஜெட்டில் நல்ல லாபத்தை கொடுக்கும் படங்களை ஜெயம் ரவி கொடுத்தார். மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் படத்திலும் நடித்திருந்தார். சில மாதங்களுக்கு முன்பு தனது பெயரை ரவி அல்லது ரவி மோகன் என அழையுங்கள் என கோரிக்கை வைத்தார்.

தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிவித்து பலருக்கும் அதிர்ச்சி கொடுத்தார். அதோடு, கோவாவில் வசிக்கும் கென்னிஷா என்பவருடன் அவருக்கு தொடர்பு இருப்பதாகவும் செய்திகள் வெளியானது. அதன்பின் ரவியோ அதை உறுதியும் செய்தார். மனைவி ஆர்த்தியும், அவரின் அம்மாவும் தன்னை ஏமாற்றியது உள்ளிட்ட பல புகார்களை ரவி கூறினார்.

ஒருபக்கம் நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கும் தொடர்ந்தார். இந்த வழக்கில்தான் மாதம் 40 லட்சம் ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும் எனக் கேட்டு ஆர்த்தி அதிர வைத்தார். இந்த வழக்கு இப்போது நீதிமன்றத்தில் இருக்கிறது. ஒருபக்கம் சொந்தமாக படங்களை தயாரிக்க முடிவு செய்து சமீபத்தில் ரவி மோகன் ஸ்டுடியோஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தையும் துவங்கினார்.

இந்த நிறுவனத்தின் முதல் படத்தை கார்த்திக் யோகி இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே வடக்குப்பட்டி ராமசாமி, டிக்கிலோனா உள்ளிட்ட சில படங்களை இயக்கியுள்ளார். ரவி மோகனை வைத்து இவர் இயக்கவுள்ள புதிய படத்திற்கு புரோ கோட் (Bro Code) என தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. இது ஒரு ஆக்‌ஷன் – காமெடி திரைப்படம் என சொல்லப்படுகிறது. இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யாவும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment