தூக்குங்கடா அந்த செல்லத்தை… தமிழ் இயக்குனரை கட்டம் கட்டிய ரவிதேஜா… அடடா!

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:39:49  )

Raviteja: சமீப காலங்களாகவே மற்ற மொழி நடிகர்கள் தமிழ் இயக்குனர்களை தங்களுடைய படங்களில் ஒப்பந்தம் செய்யும் ட்ரெண்டை பார்க்க முடிகிறது. அந்த வகையில் நடிகர் ரவி தேஜாவும் தன்னுடைய அடுத்த படத்தில் பிரபல கோலிவுட் இயக்குனரை முடிவு செய்திருக்கிறாராம்.

தமிழ் நடிகர்கள் பெரும்பாலும் தங்களுடைய படங்களில் வெளிமாநில இயக்குனர்களை ஒப்பந்தம் செய்வது அரிது தான். ஆனால் மற்ற மொழி முன்னணி நடிகர்கள் தங்களுடைய படங்களை இயக்க தமிழ் இயக்குனர்களை நாடுவது தற்போது வழக்கமாக மாறி இருக்கிறது.

பாலிவுட் படமான ஜவானை அட்லீ இயக்கியிருந்தார். அப்படம் பாக்ஸ் ஆபிஸிில் வெளியாகி ஆயிரம் கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது. ராம்சரணை வைத்து இயக்குனர் சங்கர் தற்போது கேம் சேஞ்சர் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

சல்மான் கானை வைத்து ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படம் ஹிந்தியில் தயாராகி வருகிறது. இப்படி தொடர்ச்சியாக தமிழ் இயக்குனர்கள் மற்ற மொழி நடிகர்களுடன் இணைவது வழக்கமாகி இருக்கிறது. தற்போது அந்த லிஸ்டில் நடிகரும் இயக்குனருமான சுந்தர் சி யும் இணைந்து இருக்கிறார்.

அரண்மனை4 படத்தின் வெற்றிக்கு பின்னர் சுந்தர் சி தற்போது தமிழில் மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகத்தை இயக்க இருக்கிறார். அதைத்தொடர்ந்து தெலுங்கு நடிகர் ரவி தேஜாவின் படத்தினை இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

சமீபத்தில் ரவி தேஜாவிற்கு சுந்தர் சி கதை ஒன்றை விவரித்து இருப்பதாகவும், அவருக்கு கதை பிடித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த கூட்டணி உறுதி செய்யப்படும் பட்சத்தில் விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு படக்குழு தரப்பிலிருந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story