‘பார்க்கிங்’ படத்தை தொடர்ந்து ‘ராயன்’ படத்திற்கு கிடைத்த அங்கீகாரம்! சரியான வேண்டுதலா இருக்கும் போலயே

by ராம் சுதன் |

தனுஷ் நடிப்பில் கடந்த 26 ஆம் தேதி ரிலீஸான திரைப்படம் தான் ராயன். இதை தனுஷே இயக்கி நடித்திருந்தார். தனுஷுக்கு 50வது படமாக ராயன் திரைப்படம் அமைந்தது. நடிகர்களுக்கு அவர்களின் 50வது படம் என்பது ஒரு முக்கியமான படமாக அமைய வேண்டும் என நினைப்பார்கள்.

ஒரு சில நடிகர்களுக்குத்தான் அவர்களின் 50வது படம் வெற்றியடைந்திருக்கிறது. அதாவது அஜித், விஜய்சேதுபதி இவர்களுக்குத்தான் அவர்களின் 50வது படம் ப்ளாக் பஸ்டர் ஹிட்டானது.

இவர்களுக்கு அடுத்த படியாக தனுஷின் ராயன் திரைப்படமும் ப்ளாக் பஸ்டர் வெற்றியடைந்திருக்கிறது. இந்தப் படத்தில் தனுஷுடன் இணைந்து சந்தீப் கிஷன், காளிதாஸ் ஆகியோர்களும் நடித்திருந்தனர்.

பங்காளிகளுக்கு இடையே நடக்கும் பிரச்சினைகள் குறித்தே இந்தப் படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இதை போல பங்காளி சண்டையில் அமைந்தப் படங்களாக செக்கச் சிவந்த வானம், லியோ போன்ற படங்களை சொல்லலாம். அந்த வகையில் இந்த ராயன் திரைப்படமும் அமைந்திருக்கிறது.

மேலும் இந்தப் படத்தில் துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, எஸ்.ஜே.சூர்யா ,பிரகாஷ்ராஜ் போன்ற முக்கிய நடிகர்களும் நடித்திருக்கின்றனர். இந்த நிலையில் ராயன் திரைப்படத்தின் திரைக்கதை அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் நூலகத்தின் ஒரு பகுதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

இதை ராயன் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமே சோசியல் மீடியாவில் பகிர்ந்திருக்கிறது. இதே போல் இந்தாண்டு வெளியான ‘பார்க்கிங்’ திரைப்படத்தின் திரைக்கதையும் அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் நூலகத்தின் ஒரு பகுதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

எப்படியோ ராயன் திரைப்படம் எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என தனுஷ் குல தெய்வ கோயிலுக்கெல்லாம் சென்று வேண்டி வந்தார். இருந்தாலும் அவர் வேண்டுதலுக்கும் மேலாக படம் மிகச்சிறப்பான வெற்றியையே பதிவு செய்து வருகிறது.

Next Story