Nataraj: திருமணம் செய்து கொள்ளாமல் இருக்க காரணம்!.. எஸ்.ஜே.சூர்யா வரிசையில் நட்டி நடராஜ்!...
Actor nataraj: இயக்குனர்கள் சினிமாவில் ஹீரோவாக நடிப்பது என்பது கடந்த பல வருடங்களாகவே நடந்து வருகிறது. அதேபோல், தயாரிப்பாளர்கள், உதவி இயக்குனர்கள் கூட சில காட்சிகளில் தலை காட்டி விட்டு போவார்கள். ஆனால், ஒரு ஒளிப்பதிவாளர் நடிகராக மாறுவதை கேள்விப்பட்டிருக்க முடியாது.
ஆனால், பல தமிழ் மற்றும் ஹிந்தி படங்களில் ஒளிப்பதிவாளராக கலக்கிய நடராஜ் சதுரங்க வேட்டை படம் மூலம் நடிகராக மாறினார். ஹெச்.வினோத் இயக்கிய முதல் திரைப்படம் இது. ஆசையை தூண்டி பல வழிகளில் மக்களை எப்படி ஏமாற்றுகிறார்கள் என அழகாக காட்டியிருந்தார் ஹெச்.வினோத்.
இந்த படத்தின் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி போயிருந்தார் நடராஜ். இவரை சினிமா வட்டாரத்தில் நட்டி என அழைப்பார்கள். அந்த படம் வெற்றி பெற்றதும் நடராஜ் தொடர்ந்து நடிக்க துவங்கினார். அதன்பின் அவர் ஒளிப்பதிவாளராக பணியாற்றவில்லை. மிளகா உள்ளிட்ட சில படங்களில் ஹீரோவாக நடித்துவிட்டு வில்லனாக மாறினார்.
பெரும்பாலும் போலீஸ் அதிகாரியாக நடிப்பார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த கர்ணன் படத்திலும் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அதேபோல், விஜய் சேதுபதிக்கு ஹிட் படமாக அமைந்த மகாராஜா படத்திலும் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார்.
இவருக்கு 51 வயது ஆகிறது. இதுவரை திருமணமே செய்து கொள்ளவில்லை. இதுபற்றி ஊடகம் ஒன்றில் பதில் சொன்ன நடராஜ் ‘அது எனக்கு செட் ஆகவே இல்லை. மனதிற்குள் ஒரு பயமும் உண்டு. ஒளிப்பதிவாளர் வேலை என்பது படப்பிடிப்பில் முதலில் போய் கடைசியாக வெளியே வர வேண்டும். நமக்காக ஒரு பெண் வீட்டில் காத்திருக்க வேண்டும். அது அவர்களுக்கு மிகவும் கடினமாக இருக்கும்.
அதனாலேயே திருமணம் செய்து கொள்ளாமல் இருந்துவிட்டேன். இதற்காக என் அம்மா என்னை தொடர்ந்து திட்டி கொண்டே இருப்பார்’ என சொல்லி இருக்கிறார். நடிகர் எஸ்.ஜே.சூர்யாவும் இதே காரணத்தை சொல்லி திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.