Categories: latest news

கோர்ட்ல சாமி வந்து ஆடும் லாயர்… சூர்யா 45 பரபர அப்டேட்!

சூர்யாவுக்கு தொடர்ந்து படங்கள் பிளாப் ஆகிய நிலையில் கடைசியாக வெளியான ரெட்ரோ படம் சுமாராகப் போனது. இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தால் கூட அது நடந்து இருக்கலாம். ஆனால் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யவில்லை. இந்நிலையில் ஆர்.ஜே.பாலாஜியுடன் சூர்யா இணைந்துள்ள படம் குறித்த சில தகவல்களைப் பார்ப்போம்.

ஆர்.ஜே.பாலாஜியுடன் சூர்யா இணைந்துள்ள படம் கமர்ஷியலாக வந்துள்ளது. ஆர்.ஜே.பாலாஜி ஏற்கனவே கலகலப்பானவர். அதனால படத்துல ஆக்ஷன், சென்டிமென்ட், காமெடின்னு எல்லாமே இருக்கும்.

முதலில் நயன்தாரா மாதிரி ஒரு ஹீரோயினை வைத்து இந்தப் படத்தை எடுக்கணும் னுதான் நினைச்சாங்களாம். ஆனால் ஐசரி கணேஷ்சுக்கும், ஆர்.ஜே.பாலாஜிக்கும் பிரச்சனை வந்து மூக்குத்தி அம்மன் 2 பண்ண முடியாது என்ற ஒரு நிலை வருகிறது. அதன்பிறகு இந்தப் படத்தின் கதை நாயகனை பேஸ் பண்ணி போகிற மாதிரி ஆர்.ஜே.பாலாஜி மாத்துறாரு. எதிர்பாராத பல விஷயங்களை அந்தப் படத்தில் வைத்துள்ளார்.

கதைப்படி சூர்யா ஒரு லாயர். ஃபைனலா கோர்ட்ல அவர் மேல சாமி வந்து இறங்குது. அப்போ என்ன நடக்குதுங்கறதுதான் கதை. யோசனையே ரொம்ப புதுசா இருக்கு. படத்துல ஒரு பெரிய என்ஜாயின்மெண்ட் இருக்குறது உறுதி. மேற்கண்ட தகவலை பிரபல வலைப்பேச்சாளர் அந்தனன் தெரிவித்துள்ளார்.

எஸ்.ஆர்.பிரபு தயாரிக்க ஆர்.ஜே.பாலாஜி இயக்கி வரும் படம் சூர்யா 45. இது சூர்யாவுக்கு 45வது படம். இந்தப் படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். ஸ்வாசிகா, யோகிபாபு, நட்டி உள்பட பலர் நடித்துள்ளனர். ஜிகே.விஷ்ணு எடிட்டிங் மற்றும் ஒளிப்பதிவாளராக உள்ளார். இந்தப் படமாவது சூர்யாவுக்கு பெரிய கம்பேக்கைக் கொடுக்குமா என்று பொறுத்திருந்து பார்ப்போம். ஏன்னா ஆர்.ஜே.பாலாஜி மூக்குத்தி அம்மன் என்ற படத்தை இயக்கி மிகப்பெரிய ஹிட்டைக் கொடுத்துள்ளார். அதனால் படம் நிச்சயம் ஹிட் ஆகும் என்றே தெரிகிறது.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

1 minute ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

1 hour ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

2 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

3 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

3 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

10 hours ago