Categories: latest news

படத்தில மட்டுமில்ல நிஜத்திலும் ஹீரோதான்… ராஜமெளலி ஆச்சரியப்படுத்திய தமிழ் ஹீரோ

Rajamouli: தற்போதைய இயக்குனர்களில் முக்கிய இடம் பிடித்திருப்பவர் ராஜமௌலி. அவருடைய ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என்பது எல்லா பிரபலங்களுக்கும் கனவாக மாறி இருக்கிறது. ஆனால் அவரையே ஒரு நடிகர் ஆச்சரியப்பட வைத்த சம்பவம் தான் நடந்திருப்பதாக தகவல்கள் கசிந்து இருக்கிறது.

தெலுங்கில் ஸ்டுடென்ட் நம்பர் 1 படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ராஜமௌலி. தொடர்ச்சியாக சில படங்களை இயக்கினாலும் அவருக்கு பெரிய அளவில் அங்கீகாரம் முதலில் கிடைக்கவில்லை. இதைத்தொடர்ந்து அவர் இயக்கத்தில் மகதீரா திரைப்படம் வெளியானது.

நடிகர் ராம்சரணுக்கு இத்திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி படமாக அமைந்தது. தெலுங்கில் மட்டுமல்லாமல் பல மொழிகளில் இப்படம் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து ராஜமௌலிக்கு தெலுங்கில் ஒரு இடம் கிடைத்தது. அதைத் தொடர்ந்து அவர் இயக்கத்தில் வெளியான நானி திரைப்படம் இதே போன்ற வெற்றியை நடிகர் நானிக்கு பெற்றுக் கொடுத்தது.

இதைத்தொடர்ந்து தெலுங்கு சினிமாவையே உலகளவில் திரும்பி பார்க்க வைக்கும் அளவு பாகுபலி திரைப்படத்தை இயக்கியிருந்தார். அதை தொடர்ந்து பேன் இந்தியா என்ற வார்த்தை ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமானது. இவர் தன்னுடைய படங்களில் சின்ன கேரக்டருக்கு கூட பிரபலங்கள் தேர்வு செய்வதை கவனமுடன் இருப்பார்.

அப்படி அவர் இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் நடிக்க நடிகரும் இயக்குனருமான சமுத்திரக்கனியிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார். அவரும் ராஜமௌலி அழைத்த உடனே அப்படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்து இருக்கிறார். சம்பளம் குறித்து ராஜமௌலி சமுத்திரக்கனியிடம் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

அவரோ அதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் என கூறிவிட்டாராம். ராஜமௌலியும் அவருக்கு இரண்டு ரூபாய் தருவதாக கூறிவிட்டார். இதைத் தொடர்ந்து ஆர்ஆர்ஆர் படத்தில் வெங்கடேஷ்வரலு என்ற கேரக்டரில் நடித்து முடித்து இருக்கிறார். அதைத்தொடர்ந்து சம்பளமாக இரண்டு கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் சமுத்திரக்கனி தனக்கு 2 லட்சம் தான் சம்பளம் என நினைத்துக் கொண்டிருக்கிறார். இதனால் பணம் அதிகமாக வரவு வைக்கப்பட்டுவிட்டது என நினைத்து உடனே ராஜமௌலிக்கு கால் செய்து மீதமிருக்கும் பணத்தை அனுப்பி விடவா எனக் கேட்டு இருக்கிறார்.

அதற்கு ராஜமெளலி சிரித்துக்கொண்டே அதிகமாக எல்லாம் இல்லை. அதுதான் உங்களின் சம்பளம் என தெரிவித்தாராம். வந்த பணத்தை வைத்துக் கொள்ள நினைக்காமல் திரும்பி அனுப்பவா என கேட்ட சமுத்திரக்கனியின் குணத்தால் அவருக்கு தெலுங்கு சினிமாவில் தொடர்ச்சியாக வாய்ப்புகள் குவிந்ததாகவும் கூறப்படுகிறது.

ராம் சுதன்

Recent Posts

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

21 minutes ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

2 hours ago

குக் வித் கோமாளியில் இனி ரக்‌ஷன் இல்ல!… இவர் தான் OG ஆங்கரா? அடுத்த பிரச்சனைக்கு தயார் போலயே!

Cook with Comali 7: பிரபல விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் இனி ஆங்கராக ரக்‌ஷனுக்கு பதில்…

2 hours ago

மீண்டும் இணையும் ஜோடி: தி மம்மி 4 வெளியீட்டு தேதி அறிவிப்பு!

உலகம் முழுவது சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படம் தி மம்மி. ஆக்‌ஷன், த்ரில்லர் மற்றும் ஃபேண்டஸி என அனைத்தும் கலந்து…

2 hours ago

கோபத்தில் விஜய் கன்னத்தில் அறைந்த எஸ்.ஏ.சி?!. பிரிவுக்கு இதுதான் காரணமா?..

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…

5 hours ago

kalidas 2 Review: காளிதாஸ் 2- திரைப்பட விமர்சனம்

பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…

6 hours ago