டைட்டிலில் கோட்டை விட்ட சூர்யா - ஆர்.ஜே.பாலாஜி படம்… ஹீரோயினில் ஹிட்டடிச்சிட்டீங்களே!..

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:34:53  )

Surya: சூர்யா நடிப்பில் அடுத்து உருவாக இருக்கும் ஆர்.ஜே பாலாஜி திரைப்படத்தின் முக்கிய அப்டேட் இணையத்தில் கசிந்திருக்கிறது. ஆனால் இப்படத்தின் டைட்டிலில் படக்குழு சறுக்கி விட்டதாக ரசிகர்கள் கிசுகிசுத்து வருகின்றனர்.

எதற்கும் துணிந்தவன் திரைப்படத்திற்கு பின்னர் நடிகர் சூர்யா நடிப்பில் கோலிவுட்டில் எந்த திரைப்படமும் இதுவரை வெளியாகவில்லை. இதில் விக்ரம் திரைப்படத்தின் கிளைமாக்ஸ் மட்டும் ரோலக்ஸ் என்ற சின்ன கேமியோ ரோலில் சூர்யா நடித்திருப்பார்.

அப்படமும் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. இரண்டு வருடங்கள் கடந்து இருக்கும் நிலையில் வரும் நவம்பர் 14ஆம் தேதி சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கங்குவா திரைப்படம் ரிலீஸ் இருக்கு தயாராகி இருக்கிறது. பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் இப்படம் பெரிய அளவில் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதைத்தொடர்ந்து நடிகர் சூர்யா கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா 44 திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். இப்படத்தின் சூட்டிங் முடிந்துவிட்ட நிலையில் இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் சூர்யாவின் அடுத்த திரைப்படத்தை நடிகரும், இயக்குனருமான ஆர்ஜே பாலாஜி இயக்குகிறார்.

இதன் அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் இப்படத்தின் அடுத்த கட்ட அப்டேட் இணையத்தில் கசிந்திருக்கிறது. இப்படத்திற்கு கருப்பு என டைட்டில் வைக்கப்பட இருப்பதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் இது இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.

அது மட்டுமல்லாமல் இப்படத்தில் நடிக்க ருக்மணி வசந்த் மற்றும் மிர்ணாளினி தாக்கூர் இருவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே ருக்மணி வசந்த் ஏ ஆர் முருகதாஸ் மற்றும் சிவகார்த்திகேயன் படத்தில் நடித்து வருகிறார்.

மிருணாளினி இப்படத்தை ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் இதுவே அவரின் முதல் கோலிவுட் படமாகவும் இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் டைட்டிலில் பட குழு சொதப்பினால் கூட ஹீரோயின் தேர்வு செமையாக இருப்பதாக ரசிகர்கள் கிசுகிசுத்து வருகின்றனர். பிடி சார் படத்தில் நடித்த கஷ்மிரா இப்படத்தில் முக்கிய இடத்தில் நடிக்க இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Next Story