பிரபல நடிகருடன் கைகோர்க்க எஸ்.ஜே.சூர்யா எடுத்த முயற்சி... தட்டித்தூக்கிய ரஜினி!

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:36:33  )

இந்தித் திரை உலகின் சூப்பர்ஸ்டாராக இருந்தவர் அமிதாப்பச்சன். இவர் நடித்த 'ஷோலே' படம் மாபெரும் வெற்றியைப் பெற்றது. இவர் ரஜினியின் நெருங்கிய நண்பர். இருவரும் இணைந்து சமீபத்தில் வேட்டையன் படத்தில் நடித்தனர். படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. ரஜினியை இந்திக்கு அறிமுகம் செய்து வைத்தவர் இவர் தான்.

அமிதாப்பச்சனுடன் இணைந்து சில படங்கள் ரஜினி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு இருவரும் இணைந்து தமிழில் நடித்துள்ள படம் தான் வேட்டையன்.

2015ல் அமிதாப்பச்சனுடன் இணைந்து தனுஷ் நடித்த இந்திப் படம் ஷமிதாப். கமலின் மகள் அக்ஷரா ஹாசனும் இந்தப் படத்தில் நடித்து இருந்தார். இந்தப் படத்துக்கு இசை அமைத்தவர் இளையராஜா. ஆர்.பால்கி இயக்கியுள்ளார்.

உயர்ந்த மனிதன் என்ற சிவாஜி நடித்த படத்தின் பெயரில் எஸ்.ஜே.சூர்யாவும், அமிதாப்பச்சனும் இணைந்து நடித்தனர். என்ன காரணத்தினாலோ படம் டிராப் ஆகி விட்டது.

எஸ்.ஜே.சூர்யா அமிதாப்பச்சனைத் தமிழில் நடிக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அவர்கள் இருவரும் இணைந்து நடிக்க உயர்ந்த மனிதன் என்ற பெயரில் தமிழிலும் இந்தப் படம் உருவாகியது. இதன் இந்திப்பதிப்பும் உருவாகியது.

'கள்வனின் காதலி' என்ற பெயரில் எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாக நடித்த படத்தை இயக்கிய தமிழ்வாணன் தான் இந்தப் படத்தையும் இயக்கினார். ஏறக்குறைய பத்து நாள்கள் படப்பிடிப்பும் நடந்தது. அதன்பிறகு சில பிரச்சனைகளின் காரணமாக அந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடரவில்லை.

அந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து அது வெளியே வந்துருந்தா அதுதான் அமிதாப்பச்சன் நடித்த முதல் தமிழ்ப்படமா இருந்துருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அமிதாப்பச்சன், எஸ்.ஜே.சூர்யா நடித்த இந்தப் படத்தில் ரம்யா கிருஷ்ணன் வில்லனாக நடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது. படத்தைத் திருச்செந்தூர் முருகன் புரடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் கண்ணன், பைவ் எலிமெண்ட் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்தனர். ஹம், அந்தாகானூன், ரா ஒன், கிராப்தர் ஆகிய இந்திப் படங்களில் ரஜினியும், அமிதாப்பச்சனும் இணைந்து நடித்துள்ளனர்.

Next Story