Categories: latest news

பிரபல நடிகருடன் கைகோர்க்க எஸ்.ஜே.சூர்யா எடுத்த முயற்சி… தட்டித்தூக்கிய ரஜினி!

இந்தித் திரை உலகின் சூப்பர்ஸ்டாராக இருந்தவர் அமிதாப்பச்சன். இவர் நடித்த ‘ஷோலே’ படம் மாபெரும் வெற்றியைப் பெற்றது. இவர் ரஜினியின் நெருங்கிய நண்பர். இருவரும் இணைந்து சமீபத்தில் வேட்டையன் படத்தில் நடித்தனர். படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. ரஜினியை இந்திக்கு அறிமுகம் செய்து வைத்தவர் இவர் தான்.

அமிதாப்பச்சனுடன் இணைந்து சில படங்கள் ரஜினி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு இருவரும் இணைந்து தமிழில் நடித்துள்ள படம் தான் வேட்டையன்.

2015ல் அமிதாப்பச்சனுடன் இணைந்து தனுஷ் நடித்த இந்திப் படம் ஷமிதாப். கமலின் மகள் அக்ஷரா ஹாசனும் இந்தப் படத்தில் நடித்து இருந்தார். இந்தப் படத்துக்கு இசை அமைத்தவர் இளையராஜா. ஆர்.பால்கி இயக்கியுள்ளார்.

உயர்ந்த மனிதன் என்ற சிவாஜி நடித்த படத்தின் பெயரில் எஸ்.ஜே.சூர்யாவும், அமிதாப்பச்சனும் இணைந்து நடித்தனர். என்ன காரணத்தினாலோ படம் டிராப் ஆகி விட்டது.

எஸ்.ஜே.சூர்யா அமிதாப்பச்சனைத் தமிழில் நடிக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அவர்கள் இருவரும் இணைந்து நடிக்க உயர்ந்த மனிதன் என்ற பெயரில் தமிழிலும் இந்தப் படம் உருவாகியது. இதன் இந்திப்பதிப்பும் உருவாகியது.

‘கள்வனின் காதலி’ என்ற பெயரில் எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாக நடித்த படத்தை இயக்கிய தமிழ்வாணன் தான் இந்தப் படத்தையும் இயக்கினார். ஏறக்குறைய பத்து நாள்கள் படப்பிடிப்பும் நடந்தது. அதன்பிறகு சில பிரச்சனைகளின் காரணமாக அந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடரவில்லை.

அந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து அது வெளியே வந்துருந்தா அதுதான் அமிதாப்பச்சன் நடித்த முதல் தமிழ்ப்படமா இருந்துருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அமிதாப்பச்சன், எஸ்.ஜே.சூர்யா நடித்த இந்தப் படத்தில் ரம்யா கிருஷ்ணன் வில்லனாக நடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது. படத்தைத் திருச்செந்தூர் முருகன் புரடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் கண்ணன், பைவ் எலிமெண்ட் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்தனர். ஹம், அந்தாகானூன், ரா ஒன், கிராப்தர் ஆகிய இந்திப் படங்களில் ரஜினியும், அமிதாப்பச்சனும் இணைந்து நடித்துள்ளனர்.

ராம் சுதன்

Recent Posts

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

2 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

3 hours ago

குக் வித் கோமாளியில் இனி ரக்‌ஷன் இல்ல!… இவர் தான் OG ஆங்கரா? அடுத்த பிரச்சனைக்கு தயார் போலயே!

Cook with Comali 7: பிரபல விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் இனி ஆங்கராக ரக்‌ஷனுக்கு பதில்…

3 hours ago

மீண்டும் இணையும் ஜோடி: தி மம்மி 4 வெளியீட்டு தேதி அறிவிப்பு!

உலகம் முழுவது சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படம் தி மம்மி. ஆக்‌ஷன், த்ரில்லர் மற்றும் ஃபேண்டஸி என அனைத்தும் கலந்து…

3 hours ago

கோபத்தில் விஜய் கன்னத்தில் அறைந்த எஸ்.ஏ.சி?!. பிரிவுக்கு இதுதான் காரணமா?..

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…

6 hours ago

kalidas 2 Review: காளிதாஸ் 2- திரைப்பட விமர்சனம்

பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…

7 hours ago