Categories: latest news

ஆடியன்ஸ் கொடுக்கிற காசு இதுக்கே சரியாபோகும்!.. கேம் சேஞ்சருக்கு பில்டப் ஏத்திய எஸ்.ஜே சூர்யா..

கேம் சேஞ்சர்: பிரம்மாண்ட இயக்குனர் என்ற பெயருடன் வலம் வரும் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் கேம் சேஞ்சர். தெலுங்கு நடிகரான ராம் சரணை வைத்து இப்படத்தை நேரடி தெலுங்கு படமாக இயக்கி இருக்கின்றார். இப்படத்தில் ராம்சரனுடன் இணைந்து கியாரா அத்வானி, எஸ் ஜே சூர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

இந்த திரைப்படத்தை தெலுங்கு சினிமாவில் இருக்கக்கூடிய பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்திருக்கின்றார். மேலும் இப்படத்திற்கு தமன் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படம் வரும் ஜனவரி 10ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் வெளியாக இருக்கின்றது. இந்த திரைப்படத்திற்கு அதிகாலை 4 மணி காட்சி மட்டுமில்லாமல் நள்ளிரவு ஒரு மணி காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் அதிக விலைக்கு டிக்கெட்டுகளை சிறப்பு காட்சிகளுக்கு விற்றுக் கொள்வதற்கும் ஆந்திராவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் ராம்சரண் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள், படம் ரிலீஸ் ஆவதற்கு இன்னும் சிறிது நாட்கள் மட்டுமே இருப்பதால் படக்குழுவினர் தொடர்ந்து புரமோஷன் நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அமெரிக்காவில் இப்படத்தின் ஆடியோ லான்ச் மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஹைதராபாத்தில் புரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. அடுத்ததாக சென்னையில் விழா நடத்துவதற்கு படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகின்றது, இது ஒரு புறம் இருக்க படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள், இயக்குனர்கள் அனைவரும் தனித்தனியாக youtube சேனல்களுக்கு பிரத்தியேக பேட்டி கொடுத்து வருகிறார்கள்.

அதில் படம் தொடர்பான சுவாரஸ்ய தகவல்களை கூறி வருகிறார்கள். அந்த வகையில் இந்த திரைப்படத்தில் வில்லனாக நடித்திருக்கும் எஸ் ஜே சூர்யா சமீபத்தில் யூடியூப் நிகழ்ச்சி ஒன்றுக்கு பேட்டி கொடுத்து இருக்கின்றார். அதில் அவர் படம் குறித்து பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்திருந்தார்.

அதில் அவர் தெரிவித்திருந்ததாவது ‘இந்த திரைப்படத்தை சாதாரணமாக செலவு செய்து எடுக்கவில்லை. கிட்டத்தட்ட 400 முதல் 500 கோடி வரை செலவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு உண்டான வட்டி எல்லாம் சேர்த்து பார்த்தால் பட்ஜெட் எங்கேயோ சென்று விடுகின்றது. அதையெல்லாம் பொறுமையுடன் தில் ராஜ் சார் முயற்சி செய்து படத்தை தயாரித்து இருக்கின்றார். தயாரிப்பாளர் தில்ராஜ் அவர்களுக்கு சங்கர் சார் என்றால் மிகப் பிரியம்.

இந்த படத்தில் ஜருகண்டி ஜருகண்டி என்று ஒரு பாடல் இருக்கின்றது. அதை முன்பே ரிலீஸ் செய்து விட்டார்கள். அது என்னவென்றால் அந்த பாடலின் சில காட்சிகள் லீக் ஆகிவிட்டது. அதனால் வேறு வழி இல்லாமல் அந்த பாடலை சும்மா லிரிக்ஸ் வீடியோ போல வெளியிட்டு இருக்கிறார்கள். அந்த பாடலை சமீபத்தில் தான் பார்த்தேன். ஆடியன்ஸ் கொடுக்கும் காசு அந்த பாட்டுக்கு சரியா போய்விடும். நான் உண்மையாக சொல்கின்றேன்.

அந்த படத்தை சமீபத்தில் தியேட்டரில் பார்த்துவிட்டு அந்த பாட்டுக்காகவே மீண்டும் படத்தை ஐ மேக்சில் சென்று பார்த்தேன். பிரபு தேவா மாஸ்டர் கொரியகிராப் வேற, அந்த பாடலில் ராம்சரனை பார்த்து பெண் ரசிகர்கள் உருகிப்போய் விடுவார்கள். அதே போல் நடிகை கியாரா அத்வானிக்கு கொடுத்த சம்பளத்துக்கு அந்த பாடலில் கவர்ச்சியாக நடனமாடி அனைத்து ஆண் ரசிகர்களையும் கிரங்கடிக்க வைப்பது உறுதி’ என்று வார்த்தைக்கு வார்த்தை அந்த ஒரு பாடலை மட்டுமே புகழ்ந்து பேசி இருக்கின்றார் எஸ் ஜே சூர்யா. அந்த அளவுக்கு இந்த பாடலை செதுக்கி இருக்கின்றார் இயக்குனர் ஷங்கர்.

ramya suresh

Recent Posts

மேடையில் மஞ்சு வாரியருக்கு உதட்டில் முத்தம் கொடுத்த ரசிகை! – வைரலாகும் வீடியோ

தென்னிந்திய சினிமாவில் தனது எதார்த்தமான நடிப்பால் தனி செல்வாக்கை பெற்றவர் நடிகை மஞ்சு வாரியர். எந்த விழாவிற்கு வந்தாலும் தனது…

3 hours ago

வயசு ஏறினாலும் அந்த ஸ்டைல் மாறவே இல்லை…சிம்ரன் லேட்டஸ்ட் போட்டோஸ்

தமிழ் திரையுலகில் 90களில் இறுதி முதல் 2002ம் ஆண்டு வரை முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். கமல், விஜயகாந்த்,…

4 hours ago

தனுஷ் என் அப்பா மாதிரி!.. தப்பு பண்ணிட்டேன்!.. ஃபீல் பண்ணி பேசிய விக்னேஷ் சிவன்..

தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…

11 hours ago

வெறித்தனமா வொர்க் அவுட் பண்ணும் ஜோதிகா!.. சிக்ஸ் பேக் வைக்க போறாரா?!..

மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…

12 hours ago

நடிகருக்கு ரஜினி கொடுத்த வாக்குறுதி நிறைவேறல… ஆனாலும் அதை விட பெட்டரா செய்த அந்த உதவி!

வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…

13 hours ago

எம்ஆர்.ராதா நடிகவேள் ஆன கதை… அப்பவே அப்படி ஒரு நடிப்பா?!

நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…

1 day ago