மகன் ஒன்னு சேர்ந்ததும் குசும்பு அதிகமா போச்சு! விஜய் குறித்து தக் லைஃப் கமெண்ட் அடித்த sac

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:36:27  )

தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். தற்போது அவரின் 69வது படம் குறித்த செய்திகள் பரபரப்பாக போய்க் கொண்டிருக்கின்றன. அவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் தி கோட். இந்தப் படத்தை வெங்கட் பிரபு இயக்கியிருந்தார். தி கோட் திரைப்படத்தில் விஜயுடன் இணைந்து சினேகா, மீனாட்சி சௌத்ரி, பிரசாந்த், மோகன் , அஜ்மல் மற்றும் பிரேம்ஜி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

படம் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில் கிட்டத்தட்ட 455 கோடி வசூலிதிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. மற்ற படங்களை விட தி கோட் திரைப்படம் வசூலில் குறைவான வசூலை பெற்றிருந்தாலும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெருமளவு வரவேற்பை பெற்ற திரைப்படமாகவே பார்க்கப்படுகிறது.

இதனை அடுத்து விஜய் எச்.வினோத் இயக்கத்தில் தன்னுடைய 69வது படத்தில் நடிக்க இருக்கிறார். அதற்கான பூஜை சமீபத்தில்தான் போடப்பட்டது. ப்ரீ புரடக்‌ஷன் வேலைகள் தட புடலாக நடந்து வருகின்றன.இந்த நிலையில் அவருடைய 69 வது படம்தான் விஜயின் கடைசி படம் என்று சொல்லப்படுகிறது.

அதற்கு அடுத்த படியாக விஜய் ஒரு முழு நேர அரசியல்வாதியாக அரசியல் பணிகளை கவனிக்க செல்கிறார். வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் நேரடியாக போட்டி போட இருப்பதால் இனி சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று அறிவித்திருக்கிறார் விஜய்.

அவருடைய கட்சி கொடி மற்றும் சின்னம் கடந்த பிப்ரவரி மாதம் தான் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் அவருடைய கொள்கை என்ன என்பதை பற்றி கட்சி மா நாட்டில் அறிவிக்கிறேன் என்று சொல்லியிருந்தார். இதனால் அவருடைய முதல் கட்சி மாநாடு விக்கிரவாண்டியில் வரும் 27 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால் மழை வந்து அந்த பகுதி முழுவதும் சேதாரம் அடைந்திருப்பதாக சொல்லப்படுகிறது.

அதனால் மாநாடு குறித்து விஜய் என்ன செய்யப்போகிறார் என்ற ஆர்வம் அனைவரிடத்திலும் இருக்கிறது. இதற்கிடையில் சமீபத்தில் விஜயின் அப்பா எஸ்.ஏ. சந்திரசேகரிடம் பத்திரிக்கையாளர்கள் ‘விஜயின் மாநாடு பற்றி ஏதேனும் சொல்ல முடியுமா’என கேட்டனர். அதற்கு எஸ்.ஏ.சி தன் அருகில் இருந்த வெங்கட் பிரபுவை கைகாட்டி ‘இவர்தான் மாநாடு படம் எடுத்தவர். அவரிடமே கேளுங்க’ என சொல்லிவிட்டு சென்றார்.

Next Story