ஷாலினிக்கு என்னதான் ஆச்சு? இனி ஃபுல் ரெஸ்ட்தான்.. பிரபலம் சொன்ன தகவல்..

by ராம் சுதன் |

தமிழ் சினிமாவில் ஒரு வெற்றி தம்பதிகளாக வலம் வருபவர்கள் நடிகர் அஜித் மற்றும் ஷாலினி. வெற்றித் தம்பதிகள் என சொல்வதற்கு காரணம் திருமணம் ஆகி 25 வருடங்களை கடந்தும் இன்று வரை அவர்கள் பற்றி எந்தவொரு சர்ச்சையான கருத்துக்களோ வதந்திகளோ வந்ததில்லை. அந்தளவுக்கு அஜித் குடும்பத்தையும் தொழிலையும் சரி சமமாக பார்த்து வருகிறார் என மூத்த பத்திரிக்கையாளர் சபிதா ஜோசப் கூறினார்.

அஜித்தை பற்றி மேலும் கூறும் போது தன் வீட்டில் வேலை பார்க்கும் ஒவ்வொருவருக்கும் தன் சொந்த காசுலேயே இன்சூரன்ஸ் கட்டி வருகிறார் என்றும் அனைவருக்கும் தனித்தனியாக வீடு கட்டிக் கொடுத்திருக்கிறார் என்றும் இப்படி அடுத்தவர்கள் குடும்பத்தின் நலனை பெரிதாக எண்ணும் அஜித் தன் குடும்பத்தை எப்படி பார்க்க மாட்டார் என்று சபிதா கூறினார்.

மேலும் பெரிய பெரிய பி.எம். டபிள்யூ காரில் போகக் கூடியவர் தன் மகனுக்காக டையர் எல்லாம் ஓட்டி விளையாடுவதையும் பார்க்க முடிந்தது. அவரை பொறுத்தவரைக்கும் உங்களில் ஒருவனாகத்தான் இருக்க விரும்புகிறார். ஆனால் மக்கள்தான் அவரை பற்றி பில்டப் எல்லாம் செய்து அஜித்தை ஒதுங்க வைத்திருக்கின்றனர் என சபிதா கூறினார்.

மேலும் ஷாலினி மேல் அளவுகடந்த அன்பை கொட்டி வருகிறார் அஜித் என்றும் கூறிய அஜித் திருமணத்திற்கு பிறகு ஷாலினிக்காக நிறைய விஷயங்களை அஜித் மாற்றியிருக்கிறார் என்றும் கூறினார்.

சமீபத்தில் ஷாலினிக்கு உடல் நிலை சரியில்லாமல் இருந்த போது கூட அருகில் இருந்து பார்த்துக் கொண்டார் அஜித். அதை பார்க்கும் போது அவர்களுக்குள் எப்படிப்பட்ட ஒரு காதல் இருக்கிறது என்பதை உணர முடிகிறது.

ஷாலினியின் ஒவ்வொரு பிறந்த நாளின் போது கூட இன்றுவரை விடாமல் தன் மனைவியை சர்ப்ரைஸ் செய்து கொண்டு வருகிறார். மேலும் திருமண நாளின் போது கூட மனைவி கூடத்தான் இருக்க விரும்புகிறார் அஜித். அதே போல் அஜித்தின் இந்த வருட பிறந்த நாளின் போது கூட ஷாலினி அஜித்துக்கு பிறந்த நாள் பரிசாக டுகாட்டி பைக்கை பரிசாக கொடுத்ததை சோசியல் மீடியாவில் வைரலாக்கினர்.

இந்த நிலையில் ஷாலினி திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உண்மையிலேயே அவருக்கு என்னதான் பிரச்சினை என்பதை சபீதா கூறினார். அதாவது ஷாலினிக்கு கர்ப்பபையில் ஏதோ பிரச்சினை ஏற்பட்டதாகவும் அதை அகற்றியிருக்கலாம் என்றும் இனிமேல் அவர் முழு ரெஸ்ட்டில் தான் இருக்க வேண்டும் என்றும் சபீதா கூறினார்.

Next Story