மருத்துவமனை பில் கட்டலயா ரஜினிகாந்த்?.. அம்பானி திருமணத்தில் போட்ட ஆட்டம்!.. பிரபலம் சொன்ன சீக்ரெட்!

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:39:39  )

நடிகர் ரஜினிகாந்த் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி நள்ளிரவில் திடீரென அப்பல்லோ மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. அதைவிட பரபரப்பான விஷயமாக ரஜினிகாந்த் மருத்துவமனை பில் கட்டவில்லை என்கிற பேச்சுக்கள் சமூக வலைதளத்தில் கிளம்பியுள்ளன.

இந்நிலையில் அது தொடர்பாக பத்திரிக்கையாளர் சபிதா ஜோசப் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பெட்டியில் தனது கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் அம்பானி மகன் திருமணத்திற்கு சென்ற நடனமாடிய போது லேசாக சரக்கு போட்டுள்ளார் என்றும் இந்த வயதிலும் மது குடிப்பதை அவர் முற்றிலுமாக நிறுத்தவில்லை. மேலும், கூலி படத்தின் படப்பிடிப்பின்போது ரஜினிகாந்த் தலைகீழாக நின்று சண்டை செய்யும் காட்சி படமாக்கப்பட்ட தாக கூறுகின்றனர்.

ரஜினிகாந்த் அதிக நேரம் அந்த காட்சியில் நடித்திருக்க மாட்டார் என்றும் டூப் பயன்படுத்திதான் அந்த காட்சியை படமாக்கி இருப்பார்கள் ஆனாலும், க்ளோஸ் அப் காட்சி நடித்த ரஜினிகாந்த் சில சிரமங்களை அனுபவித்தது தான் அவர் மருத்துவமனையில் அனுமதிக்க காலம் எனக் கூறுகிறார் சபிதா ஜோசப்.

ரஜினிகாந்த் கண்டிப்பாக லைக்கா நிறுவனத்தை காப்பாற்றுவார் என்றும் இந்தியன் 2 படத்தால் ஏற்பட்ட நஷ்டத்தை வேட்டையன் திரைப்படம் சரி செய்யும் என்று கூறியுள்ளார்.

அப்பல்லோ மருத்துவனை பில் எல்லாம் ரஜினிகாந்துக்கு ஜுஜுபி மீட்டர் அதையெல்லாம் கட்டவில்லை எனக்கு கூறுவது அவர் மீதுள்ள காழ்ப்புணர்ச்சி காரணமாக சிலர் பேசுவதுதான் அது எல்லாம் பெரிது படுத்த கூடாது என சபிதா ஜோசப் கூறியுள்ளார்.

லோகேஷ் கனகராஜுக்கு சூப்பர் ஸ்டாரின் வயது மற்றும் உடல்நிலை பற்றியெல்லாம் நன்றாகவே தெரியும். அதனால், அவர் சரியாக பார்த்து தான் கையாள்வார். அவரை இந்த விவகாரத்தில் தேவையில்லாமல் கோர்த்து விட்டுள்ளனர் என்றும் அவர் பேசியுள்ளார்.

Next Story