எஸ்.ஏ.சி. - புஸ்ஸி ஆனந்த் மோதல்? விஜய் எடுத்த அதிரடி முடிவு

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:35:18  )

தளபதி விஜய் அரசியலில் அதிரடியாக இறங்கி உள்ளார். இவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் இப்போது கவனமாக இருக்க வேண்டும். ஏன்னா மீடியாக்கள் எல்லாமே இவரை நோட்டமிட்டுக் கொண்டே இருக்கிறது. இவரது மாநாடு வரும் 27ம் தேதி நடக்க உள்ளது.

அதனால் தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் செயல்பாடுகளைத் தான் மக்களும் உன்னிப்பாகக் கவனித்து வருகிறார். பொதுச்செயலாளரான புஸ்ஸி ஆனந்த் காலில் விழுந்த தாடி பாலாஜி என அவரது பெயர் ரிமார்க் ஆகியுள்ளது.

இந்நிலையில் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருக்கும், அவருக்கும் மோதல் என்றும் சொல்லப்படுகிறது. இதுபற்றிய விவரங்களை அலசுகிறார் பிரபல வலைப்பேச்சாளர் அந்தனன். வாங்க பார்;க்கலாம்.

எஸ்.ஏ.சந்திரசேகருக்கும், புஸ்ஸி ஆனந்துக்கும் மோதல் அதிகரித்ததாகச் சொல்றாங்களேன்னு கேட்டபோது பிரபல வலைப்பேச்சாளர் அந்தனன் சொன்ன தகவல் இதுதான்.

விஜய் கையில தான் அது இருக்கு. நம்மோட அப்பா அவமானப்படுத்தப்படுகிறார்னு விஜய் தான் நினைக்கணும். அவரு தான் புஸ்ஸி ஆனந்த்துக்குக் கட்டளையிட்டு அப்பாவைப் போய் பாருங்கன்னு சொல்லணும். அவங்கக்கிட்ட ஆலோசனைக் கேட்டுக்கோங்கன்னு சொல்லி ஒரு நாளைக்கு 4 தடவை அனுப்பி வைக்கணும். அப்போ அவருக்கே தெரிஞ்சிடும்.

அப்பா ரொம்ப முக்கியமானவரு. நம்ம முதல் மரியாதையை அவருக்குத் தான் செலுத்தணும்கறது தெரியும். ஆனா விஜய் அதைச் செய்யலை. அப்படி இருக்கும்போது விஜயே அவங்க அப்பாவை மதிக்கல. நாம எதுக்கு மதிக்கணும்கறது ஆட்டோமேட்டிக்காவே தோணும். அதோட விளைவுகள் தான். இந்த மோதல்கள் நிற்கப்போறது இல்லை.

இன்னொன்னு மீடியாக்களில் புஸ்ஸி ஆனந்த்தோட செயல்பாடுகள் ட்ரோல் ஆகறதை எல்லாம் எஸ்ஏசி பார்த்துக்கிட்டுத் தான் இருக்காரு. அவருக்கு எவ்ளோ வயித்தெரிச்சலா இருக்கும். பையனை எவ்வளவு கஷ்டப்பட்டு உருவாக்கி இருக்கோம்.

இன்னைக்கு யார் யாரோ வந்து அவரோட பெயரைக் கெடுப்பது புகழைக் கெடுப்பதை அவரால தாங்கிக்க முடியாது. அதன்காரணமாக புஸ்ஸி ஆனந்தைக் கூப்பிட்டு ஏதாவது கேட்டுருக்கலாம். இதெல்லாம் வந்து ரெண்டு பேருக்கும் மோதல்னு நீங்க கேட்குறீங்க.

விஜய் மீடியாக்களில் சொல்றதைக் காதில் வாங்குகிறார். உடனடியாகத் திருத்திக்கிறார். அதனோட விளைவுகள் தான் இதெல்லாம். இப்போ என்னன்னா நம்மளைக் கண்டிக்கிறதுக்கு ஒருத்தர் இருக்காருங்கற பயம் இப்போ தான் புஸ்ஸி ஆனந்துக்கு உள்ளே வருது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story