ரீ ரிலீஸ் செய்யப்பட்ட சச்சின்… ஜெனிலியா போட்ட திடீர் பதிவு… அட நல்லா இருக்கே?

by ராம் சுதன் |
ரீ ரிலீஸ் செய்யப்பட்ட சச்சின்… ஜெனிலியா போட்ட திடீர் பதிவு… அட நல்லா இருக்கே?
X

Sachin: விஜய் நடிப்பில் சூப்பர்ஹிட் அடித்த சச்சின் திரைப்படம் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டு இருக்கும் நிலையில் அப்படத்தின் நாயகி ஜெனிலியா தன்னுடைய எக்ஸ் வலைதளத்தில் போட்டிருக்கும் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் ஸ்டைலிஷ் ஹீரோவாக நடித்த ஹிட் அடித்த திரைப்படங்களில் முக்கிய இடம் சச்சினுக்கு உண்டு. இதில் விஜய் மற்றும் ஜெனிலியா இருவரின் நடிப்பு ரசிகர்களால் மிகப்பெரிய அளவில் பாராட்டுகளை பெற்றது.

இன்றளவும் இப்படத்தின் காட்சிகள் தொடர்ச்சியாக வைரல் ஆகி வருகிறது. இந்நிலையில் சச்சின் திரைப்படத்தை சில தினங்கள் முன்னர் ரீ ரிலீஸ் செய்ய இருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு அறிவித்து இருந்தார்.

கடந்த ஆண்டு விஜய் நடிப்பில் சூப்பர் ஹிட் அடித்த கில்லி திரைப்படம் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டது. அந்த ஆண்டு வெளியான திரைப்படங்களை விட மறு ரிலீஸ் செய்யப்பட்ட கில்லி சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றது. மிகப்பெரிய கோடிகளில் வசூல் வேட்டை நடத்தியது.

அப்போதே நடிகர் விஜயின் இன்னொரு சூப்பர் ஹிட் திரைப்படத்தை வெளியிட முடிவு செய்யப்பட்டிருந்தது. அந்த வகையில் சச்சின் திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் ஆகியிருக்கும் நிலையில் விரைவில் படம் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட திட்டமிடப்பட்டிருக்கிறது.

இதற்கான அறிவிப்பையும் தற்போது தயாரிப்பாளர் வெளியிட்டு விட்டார். இந்நிலையில் நடிகை ஜெனிலியா தன்னுடைய எக்ஸ் வலைதளத்தில், சச்சினுக்கு எப்போதுமே என் இதயத்தில் இடம் உண்டு என பதிவிட்டு இருக்கிறார். தற்போது இந்த பதிவு வைரலாகி வருகிறது.

கில்லி திரைப்படம் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்திய நிலையில் நடிகர் விஜய்யின் திரைப்பயணம் விரைவில் முடிவுக்கு வர இருக்கும் சூழலில் சச்சின் ரீ ரிலீஸ் செய்யப்பட்டால் மீண்டும் ஒரு மிகப்பெரிய வெற்றியை குவிக்கும் என திரையுலகம் எதிர்பார்த்து வருகிறது.

Next Story