சச்சின் ரீ-ரிலீஸில் இப்படி ஒரு பிளானா? அப்போ இதுலயும் விஜய் சிக்சர் அடிப்பாரே!...

by ராம் சுதன் |

சினிமாவில் சமீப காலமாக ஒரு ஃபேஷன் இருந்து வருகிறது. ஏற்கனவே ரிலீஸ் ஆகி ஹிட்டான திரைப்படங்களை ரீ ரிலீஸ் என்ற பெயரில் மீண்டும் திரையில் ஒளிபரப்பு செய்கிறார்கள். அந்த வகையில் மறு ஒளிபரப்பு செய்தாலும் சில படங்கள் முன்பு ரிலீசானதை விட ரீ ரிலீஸில் பட்டையை கிளப்பி வருகின்றன. சில படங்கள் எப்போதும் போல சுமாரான வரவேற்பை பெற்று வருகின்றன.

அந்த வகையில் விண்ணைத் தாண்டி வருவாயா திரைப்படம் ரீ ரிலீஸ் என்ற வகையில் ஆயிரம் நாட்களைக் கடந்து வெற்றிகரமாக இன்னும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றது. அதைப்போல விஜய் நடித்த கில்லி திரைப்படம் யாரும் எதிர்பார்க்காத ஒரு வெற்றியை பதிவு செய்தது. அந்த வெற்றியை படக்குழுவினர் மொத்தமாக கொண்டாடிய வீடியோவும் வைரலானது.

இந்த நிலையில் மீண்டும் விஜய் நடித்த ஒரு படத்தை ரீ ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருக்கிறார்கள். 2005 ஆம் ஆண்டு ஜான் மகேந்திரன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் சச்சின். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஜெனிலியா நடித்திருப்பார். இவர்களுடன் வடிவேலு, ரகுவரன் என பல நடிகர்கள் நடித்திருந்தனர். படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார்.

இது ஒரு தெலுங்கு திரைப்படத்தின் ரீமேக் ஆகும். படம் முழுவதும் ஜாலியாக இளைஞர்களுக்கு மிகவும் பிடித்தமான படமாக இருந்தது. விஜயின் கெரியரில் சற்றும் ஒரு வித்தியாசமான படமாகவும் இது பார்க்கப்பட்டது. இந்த நிலையில் சச்சின் திரைப்படத்தை ரீ ரிலீஸ் செய்ய திட்டமிட்டு வருகிறார்கள். இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு ரீ ரிலீஸ் செய்ய இருக்கிறார்.

இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் 2005 ஆம் ஆண்டு சச்சின் திரைப்படம் ரிலீஸ் ஆனபோது எத்தனை தியேட்டர்களில் ரிலீஸ் ஆனதோ அதைவிட அதிக ஸ்கிரீனில் ரிலீஸ் செய்ய கலைப்புலி எஸ் தாணு திட்டமிட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. ரீ ரிலீஸ் ஆகும் நேரத்தில் வேறு எந்த பெரிய படமும் வெளிவராத வகையிலும் கவனமாக இருக்கிறார்கள்.

Next Story