பிரேமம் படத்திற்கு நோ சொன்ன சாய் பல்லவி… ஆதாரம் கொடுத்து கால்ஷூட் வாங்கிய இயக்குனர்..

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:34:12  )

Premam: தமிழ் பெண்ணான சாய்பல்லவிக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை கொடுத்த பிரேமம் திரைப்படத்தினை அவர் ஒப்புக்கொண்ட சுவாரசிய சம்பவம் குறித்து சமீபத்திய பேட்டியில் பகிர்ந்திருக்கிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான உங்களில் யார் அடுத்த பிரபுதேவா நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் சாய் பல்லவி. ஆனால் அவரால் போட்டியில் வெற்றி பெற முடியவில்லை. பைனலுக்கு சில எபிசோடுகள் முன்னரே எலிமினேட் செய்யப்பட்டார்.

இதைத்தொடர்ந்து தன்னுடைய படிப்பில் கவனம் செலுத்தி வந்தார். மருத்துவம் படித்து வந்த சாய் பல்லவிக்கு திடீரென மலையாளத்திலிருந்து பிரேமம் படத்தில் மலர் டீச்சர் ஆக நடிக்கும் வாய்ப்பு வந்தது. முதல் படமே அவருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்றுக் கொடுத்தது.

இப்படம் மலையாள ரசிகர்களை மட்டுமல்லாமல் தமிழ் ரசிகர்களுக்கும் பேவரிட் திரைப்படமாக அமைந்தது. இதற்கு முக்கிய காரணம் சாய் பல்லவி தான். அப்படத்தினை தொடர்ந்து சாய்பல்லவி தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பலமொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார்.

ஆனால் சாய் பல்லவி முதலில் பிரேமம் திரைப்படத்தை அவ்வளவு எளிதாக ஒப்புக்கொள்ளவில்லையாம். திடீரென ஒரு நாள் இவருக்கு கால் வர முதலில் அவரை இயக்குனர் தான் என நம்ப மறுத்திருக்கிறார். இதனால் அல்போன்ஸ் புத்திரன் தன்னுடைய பெயரை கூகுளில் தேடி கன்ஃபார்ம் செய்து கொள்ளுங்கள்.

நான் தான் கால் செய்திருக்கிறேன் என ஆதாரத்தை கொடுத்த பின்னரே சாய் பல்லவி பேச தொடங்கினாராம். இருந்தும் மருத்துவம் படித்துவிட்டு நடிக்க வந்தவர்கள் கோலிவுட்டில் யாருமில்லை என்பதால் முதலில் தயங்கி இருக்கிறார்.

அதைத்தொடர்ந்து படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட பின் தன்னுடைய காஸ்டியூம் முதல் கொண்டு பல கட்டுப்பாடுகளை போட்ட பின்னரே பிரேமம் திரைப்படத்தில் நடித்ததாக கூறப்படுகிறது. ரொம்பவே கட்டுப்பாடான சமுதாயத்தை சேர்ந்த என்னை ரியாலிட்டி நிகழ்ச்சியில் வந்தபோதே இவளுக்கு திருமணம் நடக்காது.

ஆண்களுடன் ஆடுவது சரியாக இருக்காது என பலர் பேசினர். அதனால்தான் நடிக்க வரும்போதும் இது போன்ற கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டியதாக இருந்தது. அப்போதே தயக்கமாக இருந்த என் பெற்றோர்கள் நடிக்க ஒப்புக்கொண்டது எந்த நம்பிக்கையில் தான் தெரியவில்லை எனவும் சாய்பல்லவி தெரிவித்து இருக்கிறார்.

Next Story