வெடித்த சமந்தா விவகாரம்... புஸ்வானமான திரிஷா... வெளுத்து வாங்கும் பிரபலம்
சினிமா உலகில் எதிரும் புதிருமாக சில சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டு தான் இருக்கின்றன. ஒரு பக்கம் ஒரு சிறு பிரச்சனை என்றாலும் ஒட்டுமொத்தமாக ஒற்றுமையாக சேரும் நடிகர் நடிகைகள் இருக்க மற்றொரு பக்கம் எவன் எக்கேடு கெட்டா நமக்கென்ன என்று போகும் நடிகர், நடிகைகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். அதைத் தான் இங்கு ஒரு பிரபலம் சுட்டிக்காட்டுகிறார். வாங்க என்னன்னு பார்க்கலாம்.
தெலுங்கானாவில் கொண்டா சுரேகா என்ற பெண் அமைச்சர் சொன்ன தகவல் தான் வைரலானது. அவர் என்ன சொன்னாருன்னா கடந்த முறை தெலுங்கானாவை ஆண்ட பாரதீய ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் தலைவர் சந்திரசேகரராவின் மகன் தான் இன்று அந்தக் கட்சியை நடத்தி வருகிறார். அவரது பெயர் ராமாராவ். அவர் தான் நாகசைதன்யா, சமந்தாவுக்கு விவாகரத்து ஏற்படக் காரணம்னு சொன்னார்.
அது பரபரப்பாகி விட்டது. தெலுங்கு திரையுலகைச் சேர்ந்தவர்களும் தொடர்ந்து கண்டனம் தெரிவித்தனர். சிரஞ்;சீவி, சமந்தா, ஜூனியர் என்டிஆர், நானி, ரகுல் ப்ரீத்திசிங் ஆகியோரும் இதில் அடக்கம். இங்குள்ள நடிகர், நடிகைகளும் ஆந்திராவைப் போல தன்னுடைய நிலைப்பாட்டை முதுகெலும்போடு நிலைநிறுத்தணும்.
தற்போது இங்கு நடிகைகள் குறித்து தரக்குறைவான விமர்சனங்கள் வெளிவருவதைப் பார்க்கிறோம். ஆனால் எத்தனையோ தளபதிகள் இருக்காங்க. அவர்கள் இதுகுறித்து எதுவுமே பேசியது இல்லை. பல கண்டனங்களுக்குப் பிறகு கொண்டா சுரேகாவும் மன்னிப்பு கேட்டுள்ளார்.
அதே நேரம் சில மாதங்களுக்கு முன் யாரோ முகம் தெரியாதவர் நான் திரிஷாவின் புருஷன்னு சொல்லி தன்னை அறிமுகப்படுத்துறாரு. திரிஷாவைப் பத்திக் கன்னா பின்னான்னு பேட்டி கொடுக்குறாரு. ஆனா அவரிடம் யாராவது ஆதாரம் இருக்கான்னு கேட்கல. அந்த அவதூறு வீடியோவைப் பலரும் பார்த்தனர்.
அதனால் வருவாய் கொட்டியது. இந்த விவகாரத்தில் திரிஷா கூட பதில் சொல்லல. அதற்கு திரிஷாவின் அம்மா சொன்னது தான் வேடிக்கை. நாங்க ஏதாவது சொல்லி அந்;த ஆளை பப்ளிசிட்டியாக்க விரும்பலன்னு சொல்லிட்டாங்க. சக நடிகர்கள் கூட இதனால் தனக்கு சிக்கல் வந்துவிடுமோ என எதிர்கருத்தை சொல்லவில்லை. இந்த அமைதி ஆபத்தானது. மேற்கண்ட தகவலை பிரபல வலைப்பேச்சாளர் பிஸ்மி தெரிவித்துள்ளார்.