நாக சைதன்யாவின் திடீர் நிச்சயத்தார்த்தம்… சமந்தா போட்டிருக்கும் இன்ஸ்டா பதிவு!...
பிரபல முன்னணி நடிகையான சமந்தாவின் முதல் கணவர் நாக சைதன்யா மற்றும் சோபிதா இருவருக்கும் இன்று நிச்சயதார்த்தம் நடக்கும் நிலையில் சமந்தாவின் இன்ஸ்டா போஸ்ட் வைரலாகி வருகிறது.
தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்து வந்தவர் நடிகை சமந்தா. இவருக்கும், நடிகர் நாகசைதன்யாவுக்கு யே மாயா சேசாவே படத்தில் இணைந்து நடித்த போது காதல் மலர்ந்தது. இருவரும் சில வருடங்கள் காதலித்து வந்தனர். 2017 ஆம் ஆண்டு கோவாவில் ஹிந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
ரசிகர்களின் பிரபல ஜோடியாக வலம் வந்த சமந்தா மற்றும் சைதன்யா இடையே திடீர் பிரச்சினை உருவானது. திருமணத்திற்கு பின்னரும் சமந்தா நடிப்பில் மீது தொடர்ந்து கவனம் செலுத்தி வந்தார். அதிலும், புஷ்பா படத்தில் அவர் ஆடிய ஒற்றை பாடல் குடும்பத்திற்குள் பெரிய பிரச்சினையை உருவாக்கியது. இதைத் தொடர்ந்து இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வந்தனர். 2021 ஆம் ஆண்டு அக்டோபர் இரண்டாம் தேதி தங்களுடைய விவாகரத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
இதை தொடர்ந்து நடிகை சமந்தா மன உளைச்சலுக்கு ஆளானதாக கூறப்படுகிறது. அவருக்கு மியூசிட்டஸ் என்ற நோயும் ஏற்பட்டது. அதே நேரத்தில் சைதன்யா நடிகை சோபிதாவை காதலித்து வந்ததாக கிசுகிசுக்கள் கிளம்பியது. இருவரும் பல இடங்களில் ஒன்றாக தென்பட்டனர். சைதன்யா அடுத்த திருமணத்திற்கு தயாராகி விட்டதாக சினிமா வட்டாரங்களில் பேச்சுக்கள் அடிப்பட தொடங்கியது.
இந்நிலையில் இன்று நாகர்ஜுனா வீட்டில் சைதன்யா மற்றும் சோபிதாவின் நிச்சயதார்த்த விழா நடக்க இருப்பதாக தகவல்கள் கசிந்து உள்ளது. இந்த நேரத்தில் நடிகை சமந்தா, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில நேரங்களில், இழகுதன்மையுடன் இருப்பவர்கள் கடினமான தடைகளை எதிர்கொள்கின்றனர். உயர்ந்த சக்தி உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறது
கஷ்டத்திற்கு மத்தியிலும் நிலைத்து நிற்கும் உங்களின் அசாத்திய திறமை உண்மையிலேயே போற்றத்தக்கது என ஒலிம்பிக்கில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகத்துக்கு ஆறுதல் பதிவை போட்டு இருக்கிறார். இதில் வந்த ரசிகர்கள் சமந்தாவுக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.