நான் ஆவரேஜ் நடிகை தான்! யார் என்ன சொன்னாங்கன்னு தெரியலையே.. சமந்தாவின் திடீர் பதிவு

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:36:09  )

தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை சமந்தா. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் ஒரு முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். தமிழில் பானா காத்தாடி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான சமந்தா தொடர்ந்து பல படங்களில் நடித்து விஜய் சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து ஒரு தவிர்க்க முடியாத நடிகையாக மாறினார்.

விஜயுடன் தொடர்ந்து மூன்று படங்களில் நடித்து ஒரு சூப்பர் ஹிட் ஹீரோயின் ஆகவே மக்களிடையே பிரபலமானார். அதனைத் தொடர்ந்து தெலுங்கிலும் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார். இதற்கிடையில் அவருடைய திருமணம் குடும்பம் என சொந்த வாழ்க்கையில் பிசியாக இருந்த சமந்தா அந்த திருமண வாழ்க்கையில் பிரச்சனை ஏற்பட அதிலிருந்து விலகி வந்தார்.

அதன் பிறகு புஷ்பா படத்தில் அவர் ஆடிய அந்த நடனம் அனைவரையும் பிரமிக்க வைத்தது. அதிலிருந்து மீண்டும் தனது செகண்ட் இன்னிங்க்ஸை ஆரம்பித்தார். கதீஜா என்ற கதாபாத்திரத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் நடித்து மீண்டும் தமிழ் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தார்.

நடிகைகளிலேயே சமந்தாவிற்கு தான் அதிக ரசிகர்கள் இருந்து வருகிறார்கள். இதைப் பற்றி ஏற்கனவே ஒரு பிரபல இயக்குனர் ரஜினிக்கு அடுத்தபடியாக சமந்தாவிற்கு தான் எல்லா மொழிகளிலும் ரசிகர்கள் அதிகம் என கூறினார். இந்த நிலையில் சமந்தாவின் ஒரு பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது.

அதாவது நான் இன்னும் ஆவரேஜான நடிகை தான். இன்னும் என் நடிப்பில் முதிர்ச்சியை கொண்டு வர நான் முயற்சித்து வருகிறேன். என் சினிமா கெரியரில் எத்தனையோ வெற்றிகளை நான் பார்த்திருந்தாலும் அவை அனைத்திற்கும் கூட்டு முயற்சி தான் காரணம் .

ஒரு படத்திற்கு பின்னால் எத்தனையோ நிபுணர்களின் உழைப்பு இருக்கிறது. ஒரு திரைப்படத்திற்கு பின்னால் திறமையான குழுவினர் இருந்தால்தான் நமது திறமை வெளியே வரும் என பதிவிட்டு இருக்கிறார்.

Next Story