சமுத்திரக்கனி சொன்ன ஒரு வார்த்தை! ஜெயம் ரவியின் வாழ்க்கையையே மாத்திருக்கு.. இது எப்போ?

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:38:25  )

தமிழ் திரையுலகில் ஒரு முக்கிய நடிகராக கருதப்படுபவர் நடிகர் ஜெயம் ரவி. அவருடைய அண்ணன் மோகன் ராஜா இயக்கத்தில் உருவான ஜெயம் என்ற படத்தின் மூலம் அறிமுகமான ஜெயம் ரவி முதல் படத்திலிருந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அவர் நடிக்க வந்து முதல் மூன்று படங்களுமே சூப்பர் டூப்பட் ஹிட்.

இதுவரை எந்த நடிகர்களுக்கும் இந்த மாதிரி அமைந்தது இல்லை. தொடர்ந்து பல படங்களில் நடித்து சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத நடிகராக மாறினார் ஜெயம் ரவி. பெண்களின் மனதை கொள்ளை கொண்ட நடிகராகவும் மாறினார். நடிப்பு பரதநாட்டியம் டான்ஸ் என அனைத்திலும் கை தேர்ந்தவராக இருக்கிறார் ஜெயம் ரவி.

தற்போது அவருடைய மனைவி ஆர்த்தியுடனான விவாகரத்து பிரச்சனை பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. தன்னுடைய மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து பெற வேண்டும் என்ற முனைப்பில் தீவிரமாக இருந்து வருகிறார். அதற்கு காரணம் இதுவரை மனைவி மற்றும் மாமியார் இவர்களின் கட்டுப்பாட்டில் இருந்ததாக கூறப்படுகிறது.

அவர்கள் வீட்டில் வேலை பார்க்கும் வேலையாட்களை விடவும் தன்னை மோசமாக நடத்தினார்கள் என்றும் ஜெயம் ரவி தரப்பில் கூறப்பட்டது. சுதந்திரமாக தான் எங்கேயும் சுற்ற முடியவில்லை. என்ன செலவு செய்தாலும் அதை கேள்வி கேட்கும் அதிகாரத்தில் மனைவி இருக்கிறார் என்ற பல புகார்களை ஜெயம் ரவி தரப்பிலிருந்து கூறப்பட்டு வந்தது.

இந்த நிலையில் ஜெயம் ரவியின் நடிப்பில் பிரதர் திரைப்படம் வரும் அக்டோபர் 31ஆம் தேதி ரிலீசாக இருக்கின்றது. அந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார் ஜெயம் ரவி. அவ்வப்போது பல youtube சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார்.

இந்த நிலையில் ஒரு தனியார் youtube சேனலுக்கு பேட்டி கொடுத்த ஜெயம் ரவியிடம் அவர் நடித்த படத்தில் அவருடைய கதாபாத்திரத்தை பற்றி கேள்வி கேட்கப்பட்டது .அதில் நிமிர்ந்து நில் படத்தில் தன் முன் நடக்கும் அநியாயத்தை தட்டிக் கேட்கும் ஒரு மனிதராக அந்த படத்தில் நடித்திருப்பார். நியாயமாக இருக்க வேண்டும். யாருக்காகவும் எதற்காகவும் எந்த சூழ்நிலையிலும் பொய் சொல்லக்கூடாது. நேர்மையாக இருக்க வேண்டும் என்ற ஒரு கதாபாத்திரம் அது.

உண்மையிலேயே அப்படித்தானா உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எப்படி என்ற ஒரு கேள்வி அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த ஜெயம் ரவி முதலில் அந்த கேரக்டரை புரிந்து கொள்வதற்கே எனக்கு வெகு நாட்கள் ஆனது எனக் கூறினார்.மேலும் அந்த கேரக்டரை புரிந்து கொள்ள ஏதாவது ஒரு வகையில் எனக்கு புரியும் படி சொல்லுங்கள் என படத்தின் இயக்குனரான சமுத்திரக்கனியிடம் கேட்டுக் கொண்டே இருந்தாராம்.

உடனே சமுத்திரக்கனி நீ நீயா இரு. அதுதான் இந்தப் படத்தின் கேரக்டர் என சொல்லியிருக்கிறார். மேலும் நீ நீயா இருக்க பெரிய போர் புரிய வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறார். இந்த வார்த்தையை கேட்டதும் ஜெயம் ரவிக்கு பெரிய மாற்றம் வந்தது போல இருந்ததாம்.

எப்பேற்பட்ட பெரிய வார்த்தை அது? உண்மையிலேயே நாம் நாமாக இருக்கனும்னா விடமாட்டாங்க. சமுத்திரக்கனி சொன்னது சாதாரண விஷயம் கிடையாது. ரொம்ப கஷ்டம் அப்படி இருக்கிறது. ஆனா நாம் நாமாக இருக்க வேண்டும். அது நம் லைஃப்ல ரொம்ப கஷ்டம். அந்த கஷ்டத்தை எடுத்துக்கிட்டு நான் இப்போ இருக்கிறேன் என நம்புகிறேன் என ஜெயம் ரவி கூறினார்.

Next Story