Categories: Cinema News latest news

என் தம்பி சூர்யா எப்படிப்பட்டவன்!. அவன போய்!.. புலம்பி தள்ளிய சமுத்திரக்கனி!..

Actor suriya: சூர்யாவின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் கங்குவா. ஞானவேல் ராஜா தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கிய படம் இது. ஹாலிவுட் சரித்திர பட ஸ்டைலிலி இந்த படத்தின் மேக்கிங்கை உருவாக்கியிருந்தார்கள். மிகவும் அதிக பட்ஜெட்டிலும் இப்படம் எடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

கங்குவா நெகட்டிவ் ட்ரோல்:

ஆனால், இந்த படம் வெளியான போது நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றது. அதிலும் சூர்யாவை பிடிக்காத குரூப் கங்கணம் கட்டிக்கொண்டு இப்படத்தை காலி செய்தே ஆக வேண்டும் என வெறித்தனமாக இறங்கினார்கள். டிவிட்டரிலும், யுடியூப்பிலும் இப்படத்தை கடுமையாக விமர்சித்து ட்ரோல் செய்தார்கள்.

பாக்ஸ் ஆபிசில் தோல்வி:

இந்த நெகட்டிவ் விமர்சனங்களாலேயே இப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெறாமல் போனது. ஒரு பக்கம் படத்திலும் சில குறைகளும் இருந்தது. குறிப்பாக படத்தில் வந்த சவுண்ட் எஃப்கெட் காதை கிழிப்பது போல இருந்தது. இதுவே பலருக்கும் எரிச்சலை கொடுத்தது. இப்படி நெகட்டிவ் கமெண்ட்ஸ்களை பெற்றதால் கங்குவா படம் பாக்ஸ் ஆபிசில் மண்ணை கவ்வியது.

2 ஆயிரம் கோடி வசூலை அள்ளும் என ஞானவேல் ராஜா சொன்ன நிலையில் இப்படம் 100 கோடியை கூட தொடவில்லை. இது சூர்யாவை கடுமையாக அப்செட் ஆக்கியது. மனைவி ஜோதிகாவுடன் கோவில்களுக்கு சென்று சோகமாக அவர் சாமி தரிசனம் செய்த சம்பவங்கள் எல்லாம் நடந்தது.

சமுத்திரக்கனி:

இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய இயக்குனர் மற்றும் நடிகர் சமுத்திரக்கனி ‘என் தம்பி சூர்யா மிகவும் நல்லவன். மக்களுக்கு எதாவது செய்ய வேண்டும் என எப்போதும் என்னிடம் சொல்லிக்கொண்டே இருப்பான். எவ்வளவோ ஏழை குழந்தைகளை படிக்க வைத்திருக்கிறான். அவரை குறிவைத்து தாக்கினார்கள். இது வன்மத்தின் உச்சம்.

தாயின் மார்பை அறித்து பசியாற முடியுமா? அது போல சினிமாவில் பிழைக்கும் கூட்டமே அவருக்கு எதிராக நின்றது. ஆனால், என் தம்பி சூர்யா பீனிக்ஸ் பறவை போல எழுந்து வருவான். வெற்றிகளை தருவான்’ என கோபத்துடன் பேசியிருக்கிறார்.

Published by
சிவா