Santhanam: தற்போது சந்தானம் நடிப்பில் டிடி நெக்ஸ்ட் லெவல் படம் ரிலீஸாக இருக்கின்றது. இந்தப் படத்தை ஆர்யா தயாரித்திருக்கிறார். கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான டிடி ரிட்டர்ன்ஸ் படத்தின் தொடர்ச்சிதான் டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படம். டிடி ரிட்டர்ன்ஸ் திரைப்படம் ஏற்கனவே ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்று வெற்றிப்பெற்றது. அதனால் இந்த டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படத்தின் மீதும் எதிர்பார்ப்பு அதிகளவில் இருக்கிறது.
டிடி நெக்ஸ்ட் லெவெல் திரைப்படம் வரும் 16 ஆம் தேதி ரிலிஸாக இருக்கின்றது. அதனால் பட ப்ரோமோஷனில் சந்தானம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். நேற்று கூட பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அந்த சந்திப்பில் சந்தானம், ஆர்யா ஆகியோர் கலந்து கொண்டு பல விஷயங்களை பகிர்ந்தனர். அப்போது சந்தானத்திடம் ‘அரசியலுக்கு வரமாட்டேனு சொன்னீங்க’
‘ஆனால் இப்போது உங்க நண்பர் உதய் அரசியலில் இருக்கிறார். வா பிரச்சாரத்திற்கு போவோம் என்று சொன்னால் நீங்கள் போவீங்களா?’ என்று கேட்டார். அதற்கு சந்தானம் ‘பிரச்சாரத்தையும் தாண்டி நீங்க உழைச்சா உங்களுக்கு காசு. நான் உழைச்சா எனக்கு காசு. எல்லாத்தையும் தாண்டி நம்முடைய கம்ஃபர்ட் சோன்னு ஒன்னு இருக்கு. இப்போ சிம்பு அவருடைய படத்தில் நடிக்க கூப்பிட்டார்’
‘ நீ பழைய மாதிரிதான் நடிக்கணும்னு என்னை ஃபோர்ஸ் பண்ணவில்லை. எனக்குனு சுதந்திரம் கொடுத்திருக்காரு. எனக்கு என்னுடைய கேரக்டர் எப்படி இருக்கனும்னும் சொல்லிட்டாரு. அதை போலதான் என்னுடைய கம்ஃபர்ட் சோனுக்குள்ள இருந்தால் கண்டிப்பாக பிரச்சாரம் பண்ணுவேன்.’என சந்தானம் கூறியிருக்கிறார். அதாவது அவரை அவராக விட்டுவிட வேண்டும் என சொல்ல வருகிறார் சந்தானம்.
uthaynithi
இந்தப் படத்திற்கு பிறகு சந்தானம் மீண்டும் சிம்புவுடன் அவருடைய 49வது படத்தில் நடிக்க இருக்கிறார். அந்தப் படத்திற்கான பூஜை சமீபத்தில்தான் போடப்பட்டது. சந்தானம் சிம்பு கூட்டணியில் வெளியான படங்களில் நகைச்சுவைக்கு பஞ்சமிருக்காது. அதனால் இந்தப் படத்திலும் மீண்டும் சந்தானத்தின் காமெடியை எதிர்பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில்…
நேற்றிலிருந்து அஜித்…
சிவகார்த்திகேயன், ரவி…
தமிழ் சினிமாவில்…
அமராவதி திரைப்படம்…