இளையராஜாவையே கலாய்ச்ச சந்தானம்... பாட்டை அப்படி பாடி இப்படி அடி வாங்கிட்டாரே!

by sankaran v |
இளையராஜாவையே கலாய்ச்ச சந்தானம்... பாட்டை அப்படி பாடி  இப்படி அடி வாங்கிட்டாரே!
X

இளையராஜா பாடல்கள்தான் அந்தக் காலத்தில் அதாவது 80களில் எங்கு போனாலும் ஒலித்துக் கொண்டே இருக்கும். உதாரணத்திற்கு நாம் ஒரு படத்தைத் தியேட்டருக்குப் பார்க்கச் சென்றால் படம் விட்டு வெளியே வரும்போது தியேட்டரின் அருகில் உள்ள எல்லா கடைகளிலும் படத்தில் உள்ள பாடல்கள் ஒலித்துக் கொண்டே இருக்கும். அந்த மாதிரி ரசிகர்கள் இளையராஜாவின் இசையில் லயித்துப் போய் இருந்தனர்.

2023ல் நடந்த இளையராஜா நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் சந்தானம் பேசியது கலகலக்க வைத்தது. சிரிக்காதவர்களும் இதைக் கேட்டால் விழுந்து விழுந்து சிரிப்பார்கள். என்ன சொல்றாருன்னு பாருங்க...

மனசு தடுமாறும்: ராஜா சார் சாங்கை லவ் பண்றோமோ இல்லையா கண்டிப்பா அவரோட பாட்டைக் கேட்டுட்டு ஒரு பொண்ணை லவ் பண்ணுவோம். ஒரு பாட்டுல ஒரு சரணம் வரும். அது வந்துட்டு 'மனசு தடுமாறும். அது நினைச்சா இடம் மாறும்'. அந்த மாதிரி வரும். அது ஜன்னல் இங்க இருக்கும்.

இங்க டைப்ரைட்டிங் கிளாஸ் எல்லாம் இருக்கும். அதை ஓப்பன் பண்ணினா அந்தப் பொண்ணு தெரியும். நான் ஒரு லைன் பாடுறேன். அது நிக்கிறது வீட்ல. யாரும் இல்லன்னு தெரிஞ்சிடுச்சு. தனியா இருக்குன்னு.... 'தெளிசி தெளியந்தா... இது தெளிசிக்க ஜருகிந்தா'ன்னு அப்படியே தெலுங்குல பாடுறேன்.

அற்புதமான ஆச்சரியம்: அவங்க அப்பன் என்டர் ஆகிறான். 'எப்படே ஜருகிந்தா அது இப்படே தெளிந்தானு' ன்னு ஜன்னல் வழியாவே கொம்பு விட்டு அடிக்கிறான் . நான் எதுக்கு இந்த விஷயத்தைச் சொல்றேன்னா எனக்கு லாங்குவேஜே தெரியாது. ராஜா சார் பாட்டை ஒரு தடவை கேட்ட உடனேயே தெலுங்கு வந்துடுச்சு. அப்படிப்பட்ட ஒரு அற்புதமான ஆச்சரியம் ரேடியோவைக் கண்டுபிடிச்சவர் மார்கோனி.

லவ் பண்றது: ஆனா இளையராஜா இல்லன்னா அந்த ரேடியோவுக்கே வேலை இல்லை. ஏன்னா 24 மணி நேரமும் இளையராஜா இசைதான் ஓடிக்கிட்டே இருக்கு. கடைசியில இளையராஜா முத்தாய்ப்பாக சொன்ன விஷயம் இதுதான். 'லவ் பண்றதெல்லாம் அவங்க. பழி என்மேல'ன்னாரு. அரங்கில் கரகோஷம் அதிர ஆரம்பித்தது.

Next Story