பாலிவுட் ஹீரோயினாகும் விக்ரம் மகள்… இதெல்லாம் சரியா கலாய்க்கும் ரசிகர்கள்!

by ராம் சுதன் |   ( Updated:2024-11-08 10:51:48  )
vikram
X

vikram

Bollywood: தமிழ் சினிமாவில் விக்ரமின் முக்கிய ஹிட் படங்களில் ஒன்றாக இருப்பது தெய்வமகள். இப்படத்தில் விக்ரமின் மகளாக நடித்திருந்தவர் சாரா அர்ஜுன். இவர்தான் தற்போது பாலிவுட்டில் நாயகியாக அறிமுகமாக இருக்கிறார்.

விளம்பரங்கள் மூலம் நடிப்பிற்கு வந்தவர் சாரா அர்ஜுன். அவர் ஏ எல் விஜய் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவான தெய்வமகள் திரைப்படத்தில் நடித்திருந்தார். குழந்தையாக இருந்தாலும் தன்னுடைய நடிப்பால் ரசிகர்களை தன் வசம் ஈர்த்தார்.

அதைத்தொடர்ந்து இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வந்த சாரா அர்ஜுன். குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த சாரா கடந்தாண்டு வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நந்தினியின் இள பருவ கேரக்டரில் நடித்திருப்பார்.

குழந்தையாக மட்டும் பார்த்து வந்த அவரை வளர்ந்த பெண்ணாக பார்த்தபோது ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்தது. இவருக்கு கண்டிப்பாக நாயகி வாய்ப்பு கிடைக்கும் என அப்போதே பலரால் பேசப்பட்டது. இந்நிலையில் தற்போது சாரா அர்ஜுனுக்கு ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

ஆனால் அது கோலிவுட்டில் இல்லை. பாலிவுட்டில் தான் சாரா தற்போது ஹீரோயினாக நடிக்க இருக்கிறார். ரன்வீர் சிங் நடிக்கும் புதிய படத்தில் சாராவை நாயகியாக ஒப்பந்தம் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

ஆனால் சாராவின் வயதும், ரன்வீர் சிங்கிற்கும் 20 வயது வித்தியாசம் என்பதால் இது தற்போது பாலிவுட்டில் கேலி பொருளாக மாறி இருக்கிறது. இவ்வளவு பெரிய வித்தியாசத்தில் நடிகையை நடிக்க வைக்க வேண்டுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Next Story