அட ரகசியம் உடைஞ்சிடுச்சே… முதல்முறையாக தன் குழந்தை பற்றி சொன்ன பாக்கியராஜ் மகள்

Published on: November 7, 2024
---Advertisement---

Saranya Bakkiyaraj: தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் பாக்கியராஜின் மகள் சரண்யா 18 வருடம் கழித்து கொடுத்திருக்கும் பேட்டி தான் தற்போதைய கோலிவுட் வட்டாரத்தில் மிகப்பெரிய வைரல் செய்தியாக பரவியது.

தமிழ் சினிமாவில் முதல் படத்திலேயே மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்றவர் பாக்கியராஜ். அவர் தன்னுடைய நடிகையான பூர்ணிமா பாக்கியராஜ் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சாந்தனும் மற்றும் சரண்யா என இரு குழந்தைகள் உள்ளனர்.

இதில் சாந்தனு நடிகராக கோலிவுட் தோன்றி தற்போது தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். அதுபோலவே நடிகை சரண்யாவும் பாரிஜாதம் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அதில் அவருக்கு நடிகர் பிரிதிவிராஜ் ஜோடியாக நடித்திருந்தார். பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இருந்தும் அவர் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த திரைப்படம் நடிக்கவில்லை. இதில் நடிகர் சாந்தனுவிற்கு மட்டும் பிரம்மாண்டமாக கிகி என்பவருடன் திருமணம் முடிந்தது. சரண்யாவின் திருமணம் குறித்து பலர் கேள்வி எடுப்பிய போது கூட குடும்பத்தில் இருந்து எந்த பதிலும் வராமல் இருந்து வந்தது.

இந்நிலையில் 18 வருடம் கழித்து சரண்யா பாக்கியராஜ் கொடுத்திருக்கும் பேட்டி ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. காதல் தோல்வியால் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார் எனக் கூறப்பட்ட சரண்யாவிற்கு குழந்தை இருக்கிறதாம்.

தற்போது அந்த குழந்தைதான் என்னுடைய குடும்பத்தின் மொத்த மகிழ்ச்சியாக இருக்கிறது. குழந்தை பிறந்தவுடன் விட்டுவிட்டு வேலை பார்ப்பது கடினமாக இருக்கிறது. மூன்றாவது நாளில் விட்டு நான்காவது மாடியில் என்னுடைய கஸ்டமர்களை பார்க்கும் போது கூட அழுவதாக கூறினால் என்னால் வேலை செய்ய முடியாமல் தான் இருக்கிறது.

குழந்தை வைத்துக்கொண்டு நான் வேலை பார்த்ததற்கு குடும்பம் தான் மிகப்பெரிய ஆதரவாக இருப்பதாக தெரிவித்து கொள்கிறார். ஆனால் சரண்யாவின் கணவர் யார் என்ற தகவல்கள் கூறப்படவில்லை. ஒருவேளை தத்தெடுத்து வளர்க்கிறாரா என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment