கேப்டன் மாதிரியே துப்பாக்கியை தூக்கிய சண்முக பாண்டியன்!.. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தாறுமாறு!...
தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் பொன்ராம். தமிழில் ரஜினி முருகன், சீமா ராஜா, வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற பல படங்களை இயக்கியவர் தான் பொன்ராம். இவருடைய இயக்கத்தில் கடைசியாக வெளியான திரைப்படம் டிஎஸ்பி.
ஆனால் அந்தப் படம் எதிர்பார்க்காத அளவுக்கும் படுதோல்வி அடைந்தது. படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்திருப்பார். இந்த நிலையில் இவருடைய அடுத்த படத்திற்கான அப்டேட் வெளியாகி இருக்கிறது. சரத்குமார் விஜயகாந்த் மகனான சண்முக பாண்டியனை வைத்து ஒரு படம் இயக்கப் போவதாக தகவல்கள் வெளியானது.
அது சம்பந்தமான பூஜையும் போடப்பட்டது. இன்று அந்த படத்தின் டைட்டில் மற்றும் போஸ்டர் வெளியாகி இருக்கிறது. படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இதன்மூலம் சண்முக பாண்டியன் சரத்குமாரும் முதன்முறையாக இணைந்து நடிக்கும் படமாக இந்த படம் அமைய இருக்கிறது.
இந்த படம் தேனி மாவட்டத்தில் அமைந்த ஒரு கிராமத்தில் நடந்த உண்மை கதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்படும் படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. படத்தில் கமர்ஷியல் அதிகமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் படத்தின் போஸ்டரை பார்க்கும் போதே ஏதோ ஒரு ஆழமான கருத்தை சொல்ல வருவதாகவே தெரிகிறது.
விறுவிறுப்பும் கலகலப்பும் நகைச்சுவையும் நிறைந்து கூடவே சண்டை காட்சிகளும் இருக்கும் ஒரு கமர்ஷியல் படமாக இந்த படம் மிகப்பெரிய அளவில் உருவாக போகிறது. இந்த படத்தில் ஹீரோயினாக புதுமுக நடிகை தார்னிகா நடிக்க இருக்கிறார்.
இவர்களுடன் இணைந்து முனீஸ்க்காந்த் காளி வெங்கட் போன்ற பல நடிகர்கள் நடிக்கிறார்கள். படத்திற்கு பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார். தேனி மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டி மற்றும் ஆண்டிப்பட்டி போன்ற கிராமங்களை சுற்றி இருக்கும் மக்களின் வாழ்க்கையைப் பற்றி இந்த படம் பேசப்போகிறது.
சமீபத்தில் இதனுடைய படப்பிடிப்பு தேனியில் நடைபெற்ற் வருகிறது இயக்குனர் பொன்ராமுக்கு உரிய நகைச்சுவையும் சண்டைக் காட்சிகளும் இந்த படத்தில் இருக்கும் என படக் குழு தெரிவித்துள்ளது. படத்திற்கு கொம்புசீவி என பெயரிடப்பட்டுள்ளது. போஸ்டரில் கம்பீரமாக கையில் கத்தியுடன் சண்முகப்பாண்டியனும் சரத்குமாரும் நிற்பது பெரிய அளவில் வரவேற்பை பெற்று வருகிறது.