அது வேற வாய்? இது? விஜய் மீது காண்டில் இருப்பாரு போலயே சரத்… ரசிகர்கள் கலாய்

by ராம் சுதன் |
அது வேற வாய்? இது? விஜய் மீது காண்டில் இருப்பாரு போலயே சரத்… ரசிகர்கள் கலாய்
X

Vijay: தமிழில் கொடிகட்டி பறந்து வந்த நடிகர் விஜய் தற்போது அரசியலில் குதித்திருக்கும் நிலையில் அவர் மீது நடிகர்கள் பலரே கடுப்பில் இருப்பதால் மேடையில் அவதூறாக பேசிய வருவதாகவும் ரசிகர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

தளபதி விஜய் தன்னுடைய நடிப்பு வாழ்க்கையில் இருந்து வெளியாகி அரசியலில் இறங்க இருக்கிறார். தனக்கென ஒரு கட்சியையும் உருவாக்கி இருக்கும் அவர் அதற்கு தமிழக வெற்றிக் கழகம் என்றும் பெயர் வைத்து இருக்கிறார்.

கடந்தாண்டு உருவான இக்கட்சி சமீபத்தில் இரண்டாம் ஆண்டு விழாவை வெகு விமர்சையாக நடத்தியது. அதில் தலைவர் விஜய் தன்னுடைய அரசியல் எதிரியையும், கொள்கை எதிரியையும் குறித்து பேசியிருந்த வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகியது.

தற்போது பிரபல அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த பேச்சு குறித்து தங்களுடைய அதிருப்தியையும் தெரிவித்து வருகின்றனர். அது மட்டுமல்லாமல் நடிப்பிலிருந்து அரசியலுக்கு சென்ற நடிகர்கள் கூட விஜய் குறித்து தற்போது அதிகமாக விமர்சிப்பதை பார்க்க முடிகிறது.

இந்நிலையில் அரசியல் தலைவராக இருக்கும் சரத்குமார் சமீபத்தில் ஒரு மேடையில் விஜய் தன்னுடைய பிள்ளைகள் சம்பவம் செய்ததாக குறிப்பிட்டார். என்ன சம்பவம் செஞ்சுட்டாங்க. இவருக்கு எதையும் தெரிந்து கொண்டு பேச முடியவில்லை.

அவருடைய மேடையில் தமிழ் தெரியாத பிரஷாந்த் கிஷோர் இருக்கிறார். தேர்தலில் வெற்றி பெற வைக்க இப்படி ஒருவர் அவருக்கு தேவைப்படுகிறது. திமுகவை வெற்றி பெற செய்தது போல் விஜய்யை வெற்றி பெற செய்து விடுவாரா வரும் தேர்தலில் கண்டிப்பாக பார்ப்போம் என காட்டமாகவே பேசியிருக்கிறார்.

வாரிசு ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் விஜயை சூப்பர்ஸ்டார் என குறிப்பிட்ட சரத்குமார் இப்படி பேசியிருப்பது விஜய் ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. விஜய் மீது இருக்கும் கடுப்பில் தான் இவர் இப்படி பேசுவதாகவும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

அப்போது சூப்பர் ஸ்டார் என குறிப்பிட்ட போது விஜய்க்கு எதுவும் தெரியாது என்பது இவருக்கு தெரியாதா? அரசியலுக்குள் நுழைந்த உடன் விஜயை குறித்து இவர் இப்படி பேசுவது சரியா என ரசிகர்கள் கேள்விகளையும் எழுப்பி வருகின்றனர்.

Next Story