Categories: latest news

மொத்த பேரையும் திரும்பி பார்க்க வைத்த சசிக்குமார்!.. மனுஷன் சாதிச்சிட்டாரே!…

சமீபத்தில் அபிஷன் ஜீவன்த் இயக்கத்தில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் படம் டூரிஸ்ட் ஃபேம்லி. இந்தப் படத்தின் இயக்குனருக்கு வெறும் 24 வயதுதான். அவருக்கு சினிமாவில் எந்த அனுபவமும் கிடையாது. கதை ஓகே. மனசை ரொம்ப டச் பண்ணுதுங்கற ஒரே காரணத்துக்காக முன்னணி நடிகரான சசிக்குமாரும் ஒத்துக் கொண்டார்.

இதற்கே பெரிய மனசு வேண்டும். சசிக்குமாரைப் பொறுத்தவரை அவர் நடிகர் மட்டுமல்ல. பெரிய இயக்குனரும் கூட. இவரது இயக்கத்தில் வெளியான முதல் படம் சுப்ரமணியபுரம். பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது. அனைவரையும் அண்ணாந்து பார்க்கச் செய்து விட்டார். இப்படியும் ஒரு இயக்குனரா என்று. 80 காலகட்டத்தில் நடந்த அந்தக் கதை அழுத்தமாகவும், அழகியலாகவும், யதார்த்தமாகவும் இருந்தது.

அந்த வகையில் இவர் தொடர்ந்து நடித்த பல படங்களும் ஹிட் அடித்தன. இவர் இயக்கிய ஈசன் படம் ஆவரேஜ் ஹிட்டானது. சமீபத்தில் இவரது நடிப்பில் அதிரிபுதிரி ஹிட் கொடுத்த படம் டூரிஸ்ட் ஃபேம்லி. இப்போது இந்தப் படம் தயாரிப்பாளருக்கு இரு மடங்கு லாபத்தைக் கொடுத்துள்ளது. இப்போது சசிக்குமார் ஒரு கருத்தைத் தெரிவித்துள்ளார். இது அவரது நிறைஞ்ச மனசைக் காட்டுகிறது. என்ன சொல்றாருன்னு பார்க்கலாமா…

டூரிஸ்ட் ஃபேம்லி படம் வந்ததுக்குப் பிறகு உங்க சம்பளத்தை ஏத்திடுவீங்களான்னு எல்லாரும் கேட்கிறார்கள். கண்டிப்பா சம்பளம் சம்பளம் ஏறாது. அதே சம்பளம் தான். அதற்கு உறுதி அளிக்கிறேன். ஏனென்றால் ஒவ்வொருவரும் சம்பளம் ஏத்தும்போது படத்தின் பட்ஜெட் ரொம்ப ஜாஸ்தி ஆகும். இந்தப் படத்தின் வெற்றி புது இயக்குனர்களுக்கும், தோல்வி அடைந்த இயக்குனர்களுக்கும் புதிய நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது. அதுதான் எனக்கு சந்தோஷம் என்கிறார் சசிக்குமார்.

அயோத்தி படத்துக்கு முன்பு வரை சில படங்களில் தேர்ந்தெடுக்காமல் நடித்து விட்டார் சசிக்குமார். அதுகூட அவரது கடனை அடைப்பதற்காகத் தான் என்று பின்னாளில் தெரிவித்தார். அதன்பிறகு அவர் நடிக்கும் ஒவ்வொரு படங்களும் கவனிக்கத் தக்கவகையில் உள்ளன. அப்படி வந்தது தான் இந்த டூரிஸ்ட் ஃபேம்லி.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

எம்ஜிஆருடன் நேருக்கு நேராக மோதிய பானுமதி… அடுத்து நடந்த தரமான சம்பவம்..!

தமிழ்த்திரை உலகில் புரட்சித்தலைவர் என்று அன்போடு அனைவராலும் அழைக்கப்படுபவர் எம்ஜிஆர். அவரது படங்களின் வசனங்கள், பாடல்களில் இதைக் கண்கூடாகக் காணலாம்.…

15 minutes ago

மேடையில் மஞ்சு வாரியருக்கு உதட்டில் முத்தம் கொடுத்த ரசிகை! – வைரலாகும் வீடியோ

தென்னிந்திய சினிமாவில் தனது எதார்த்தமான நடிப்பால் தனி செல்வாக்கை பெற்றவர் நடிகை மஞ்சு வாரியர். எந்த விழாவிற்கு வந்தாலும் தனது…

10 hours ago

வயசு ஏறினாலும் அந்த ஸ்டைல் மாறவே இல்லை…சிம்ரன் லேட்டஸ்ட் போட்டோஸ்

தமிழ் திரையுலகில் 90களில் இறுதி முதல் 2002ம் ஆண்டு வரை முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். கமல், விஜயகாந்த்,…

11 hours ago

தனுஷ் என் அப்பா மாதிரி!.. தப்பு பண்ணிட்டேன்!.. ஃபீல் பண்ணி பேசிய விக்னேஷ் சிவன்..

தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…

18 hours ago

வெறித்தனமா வொர்க் அவுட் பண்ணும் ஜோதிகா!.. சிக்ஸ் பேக் வைக்க போறாரா?!..

மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…

19 hours ago

நடிகருக்கு ரஜினி கொடுத்த வாக்குறுதி நிறைவேறல… ஆனாலும் அதை விட பெட்டரா செய்த அந்த உதவி!

வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…

20 hours ago