சத்யராஜ் மிஸ் பண்ணிய சூப்பர்ஹிட் படங்கள்... இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு?

தமிழ்சினிமாவில் 80களில் இருந்து இப்போ வரை நடித்து வருபவர் சத்யராஜ். நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர்னு பன்முகத்திறன் கொண்டவர். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடப்படங்களில் நடித்தவர். வில்லன், ஹீரோ, குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். சில முக்கிய படங்களில் நடிக்கத் தவற விட்டுள்ளார்.
நாயகன்: 1987ல் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்த படம் நாயகன். இளையராஜா இசை அமைத்துள்ளார். பிசி.ஸ்ரீராம் இசை அமைத்துள்ளார். முதலில் இந்தப் படத்தின் கதையை மணிரத்னம் சத்யராஜிடம் தான் சொன்னாராம். ஆனால் கால்ஷீட் பிரச்சனையால் அவரால் நடிக்க முடியாமல் போனது.
உழவன் மகன்: ஆர்.அரவிந்தராஜ் இயக்கத்தில் ராவுத்தர் பிலிம்ஸ் தயாரிப்பில் விஜயகாந்த் நடித்த சூப்பர்ஹிட் படம் உழவன் மகன். விஜயகாந்த், ராதிகா, ராதா உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் முதலில் சத்யராஜ் தான் நடிக்க இருந்தார். ஆனால் கால்ஷீட் பிரச்சனையால் நடிக்க முடியாமல் போனது.
வீரன் வேலுத்தம்பி: 1987ல் ராமநாராயணன் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த படம் வீரன் வேலுத்தம்பி. ராதாரவி லீடு ரோல். கேப்டன் விஜயகாந்த் கேமியோ ரோல். இந்தப் படத்துக்கு முதலில் விஜயகாந்த்துக்குப் பதிலாக சத்யராஜைத் தான் கேமியோ ரோலில் நடிக்கக் கேட்டார்களாம். ஆனால் அவர் கேமியோ ரோல்னதும் நோ சொல்லிவிட்டாராம்.
ஏழை ஜாதி: 1993ல் லியாகத் அலிகான் இயக்கத்தில் வெளியான சூப்பர்ஹிட் படம் ஏழை ஜாதி. விஜயகாந்த், ஜெயப்பிரதா உள்பட பலர் நடித்துள்ளனர். இளையராஜா இசை அமைத்துள்ளார். இந்தக் கதை முதல்ல சத்யராஜிக்குத்தான் போனதாம். ஆனால் வழக்கம்போல கால்ஷீட் பிரச்சனை.
செந்தூர பாண்டி: எஸ்ஏ.சி. இயக்கத்தில் 1993ல் வெளியான சூப்பர்ஹிட் படம் செந்தூர பாண்டி. இந்தப் படத்தில் விஜயகாந்த், விஜய் இணைந்து நடித்துள்ளார்கள். இந்தப் படத்தில் முதலில் விஜயகாந்த் ரோலில் சத்யராஜ்தான் நடிக்க இருந்தாராம். அப்புறம் விருப்பம் இல்லாமல் நோ சொல்லி விட்டாராம்.
முறை மாமன்: 1995ல் சுந்தர்.சி. இயக்கிய படம். ஜெயராம், குஷ்பு நடித்துள்ளனர். முதலில் சத்யராஜ் நடிக்க இருந்த கதை. கால்ஷீட் பிரச்சனையால் மிஸ் ஆனது.
இவை மட்டும் அல்லாமல், அஜீத்தின் தீனா, பார்த்திபனின் அழகி, சூர்யாவின் காக்க காக்க படங்களும் மிஸ் பண்ணி விட்டாராம் சத்யராஜ். அதே போல ஷாம் நடித்த இயற்கையில் பசுபதி ரோலில் சத்யராஜை நடிக்கச் சொல்ல 'நோ' சொன்னாராம்.
சிவாஜி: ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த சிவாஜி படத்தில் வில்லன் ரோலுக்காக சத்யராஜிடம் பேச நோ சொன்னார்களாம். அஜீத் நடித்த மங்காத்தா படத்தில் நடிக்க சத்யராஜை அழைக்க அதுவும் மிஸ் பண்ணி விட்டார்.
பிகில் படத்தில் ராயப்பன் ரோல்ல சத்யராஜ் நடிக்க முடியாமல் போனது. காரணம் விஜயே டபுள் ஆக்ட் பண்றேன்னு சொல்லிவிட்டாராம். அதே போல மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்திலும் சத்யராஜிக்கு ஒரு கேரக்டரை ரெடி பண்ணினாராம் இயக்குனர். ஆனால் அதுவும் நடக்காமல் போயிடுச்சு.