சீதா இன்னைக்கு 3 வேளை சாப்பிடக் காரணமே அவரு தானாம்... பார்த்திபன் இல்ல... அப்போ யாரு?
நடிகை சீதா பார்த்திபனைக் காதலித்து 1990ல் மணம் புரிந்தவர். இந்தத் தம்பதியருக்கு 2 மகள்கள் உள்ளனர். இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2001ல் விவாகரத்து பெற்றனர்.
விவாகரத்து குறித்து ஒருமுறை பார்த்திபன் பேசும்போது 12 ஆண்டுகளை வேஸ்ட் ஆக்கி விட்டேன். திருமண வாழ்க்கை செட்டாகலைன்னா உடனே பிரிஞ்சிடுறது தான் நல்லதுன்னு சொல்ற மாதிரி ஒரு கருத்தை தெரிவித்து இருந்தார்.
அவர் அப்படி விவாகரத்து பெற 12 ஆண்டுகள் ஆகிவிட்டதாம். அதனால் விவாகரத்துக்கு 12 வருடங்களை எடுத்துக் கொண்டது தனது முட்டாள் தனம் என்றும் குறைபட்டுக் கொள்கிறார்.
இந்நிலையில் சீதா ஒரு கருத்தைத் தெரிவித்துள்ளார். அதுல அவர் சொல்றது நமக்கே ஆச்சரியமாக இருக்கிறது. என்னன்னு பாருங்க. இன்னைக்கு மூணு வேளை சாப்பாடு சாப்பிட காரணம் பாண்டியராஜன் தான். நான் ஒண்ணும் பெரிசா படிக்கல. 10 தான் படிச்சேன். அவர் தான் சினிமாவுல அறிமுகப்படுத்தினார். அவருக்கும் அவர் குடும்பத்துக்கும் எப்பவும் நான் நன்றியுடன் இருப்பேன் என்கிறார்.
சீதா நடித்த முதல் படம் ஆண்பாவம். இந்தப் படத்தில் நடித்து இயக்கியவர் பாண்டியராஜன் என்பது குறிப்பிடத்தக்கது. படம் 1985ல் வெளியானது. சூப்பர்ஹிட்டாகி பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது. இளையராஜாவின் இசையில் அத்தனைப் பாடல்களும் சூப்பர்ஹிட். அதிலும் காதல் கசக்குதய்யா என்ற பாடல் சூப்பர் டூப்பர் ஹிட்.
சீதாவுடன் பார்த்திபன் இணைந்து நடித்த படம் புதிய பாதை. இது தான் பார்த்திபன் இயக்கி நடித்த முதல் படம். கதை அழுத்தமாக இருந்ததால் பட்டி தொட்டி எங்கும் படம் சூப்பர்ஹிட் அடித்தது. பார்த்திபனுக்கும், சீதாவுக்கும் இந்தப் படத்தில் இருந்து தான் காதல் அரும்பியதாகவும் சொல்வதுண்டு.
நடிகை சீதா உன்னால் முடியும் தம்பி படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்து அசத்தியிருப்பார். அவர் நடித்த பல படங்கள் சூப்பர் ஹிட். சங்கர் குரு, குரு சிஷ்யன், டில்லி பாபு, பொண்ணு பார்க்க போறேன், ராஜ நடை, வெற்றி மேல் வெற்றி, அண்ணனுக்கு ஜே ஆகிய படங்கள் பிரபலமானவை.