ஏழு முறை தற்கொலைக்கு முயன்றேன்… இயக்குனர் செல்வராகவன் பேச்சால் அதிர்ந்த ரசிகர்கள்
Selvaraghavan: இயக்குனர் செல்வராகவன் தன்னுடைய சமூக வலைத்தள கணக்கில் எப்போதும் தன்னம்பிக்கை கருத்துக்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் அவர் சமீபத்தில் பேசி இருப்பது வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் மூத்த மகன் தான் செல்வராகவன். இவர் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தொடர்ச்சியாக வெற்றி படங்களை இயக்கி வந்தார். அதிலும் கடைசியாக தனுஷை வைத்து நானே வருவேன் படத்தினை இயக்கினார்.
இயக்குனராக வெற்றி கண்ட செல்வராகவன் நடிகராக தற்போது கலக்கி வருகிறார். தொடர்ச்சியாக சினிமாவில் நடிப்பிலும் பிஸியாக இருக்கிறார். கடைசியாக ராயன் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
இதுமட்டுமல்லாமல் செல்வராகவன் தன்னுடைய சோஷியல் மீடியாவில் எப்போதுமே பிஸியாக இருப்பார். தொடர்ச்சியாக தன்னம்பிக்கை கருத்துக்களையும் வெளியிட்டுள்ளார். இந்நிலையில் இன்று அவர் வெளியிட்டு இருக்கும் வீடியோவில், தற்கொலை எண்ணத்தில் இருந்து எப்படி விடுப்படலாம். தானும் ஏழு முறை தற்கொலை செய்ய நினைத்தாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் பேசிய வீடியோவில், உலகில் வாழும் அனைவருக்கும் இரண்டு நிலையை கடக்காமல் இருக்கவே முடியாது. அதில் ஒன்று தற்கொலை முயற்சி, மற்றொன்று மன அழுத்தம். இந்த இரண்டு இடத்தை நானும் அனுபவித்து இருக்கேன். பல வருடங்களுக்கு முன் 7 முறை தற்கொலைக்கு முயன்று இருக்கிறேன்.
தற்கொலைக்கு முயற்சி செய்யும் போது, மனதிற்குள் ஒரு குரல் கேட்கும். அந்த குரல் நம்மிடம் பேசுவது போல ஏதோ கேக்குற மாதிரி ஒரு உணர்வு இருக்கும். அந்த எண்ணத்தை கடந்து வந்த சில நாட்கள் கழித்தோ அல்லது ஆறு மாதம் அல்லது ஒரு வருடம் கழித்துக் கூட வாழ்க்கை திடீரென மகிழ்ச்சியாக அமைதியாக மாறும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.