Categories: Cinema News latest news

இத செஞ்சீங்கனா விளங்காமயே போய்டும்… இயக்குனர் செல்வராகவனின் வைரல் வீடியோ!

SelvaRaghavan: இயக்குனர் மற்றும் நடிகரான செல்வராகவன் தற்போது வெளியிட்டிருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் பலருக்கும் ஆச்சரியத்துடன் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை இயக்கி வெற்றி கண்டவர் செல்வராகவன். இயக்குனராக பல திரைப்படங்களை உருவாக்கியவர் தன்னுடைய கவனத்தை தற்போது முழுமையாக நடிப்பின் மீது செலுத்தி வருகிறார்.

தொடர்ச்சியாக முன்னணி நடிகர்களுடன் நடித்துவரும் செல்வராகவன் தொடர்ந்து தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் சில தத்துவங்களை வெளியிடுவது வழக்கம். அதில் சில விஷயங்கள் பலருக்கும் தங்களுக்காக சொல்லப்பட்டதாகவே தோன்றும்.

அதுபோல தற்போது ஒரு வீடியோவை ரெக்கார்ட் செய்து வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் பேசுகையில், ”நீங்க ஒரு விஷயத்தை செய்யப் போறீங்க. ஒரு விஷயத்தை அடையறதுக்கான வேலையில் உங்களை தயார்படுத்திக்கிட்டு இருக்கீங்க. ரொம்ப நல்லது.”

”அதை ஏன் மற்றவர்களுக்கு தம்பட்டம் அடிக்க வேண்டும். நான் என்ன செய்யப் போறேன் தெரியுமா? நான் என்ன செஞ்சுகிட்டு இருக்கேன் தெரியுமா என எல்லோருக்கும் சொல்லிக்கிட்டே இருந்தால் அந்த விஷயம் விளங்காமயே போயிடும். அவங்க எல்லாம் அத கேட்டு சந்தோஷமா படுவாங்க.”

”அதுபோல யாரிடமும் உதவி கேட்காதீர்கள். இங்கே உதவி செய்யிற யாரும் அப்படியே விடுவதில்லை. மற்றவர்களிடம் என்னால்தான் அவன் பெரிய ஆளா ஆனான் என உங்கள் வாழ்க்கை முழுவதும் சொல்லிக் கொண்டே இருப்பார்கள்” எனவும் தெரிவித்திருக்கிறார்.

பொதுவாக செல்வராகவன் இப்படி தத்துவ வீடியோக்கள் வெளியிடுவது வழக்கம்தான். ஆனால் இது அவரின் வாழ்க்கையில் நடந்த விஷயத்தின் பிரதிபலிப்பா என்பது குறித்து பெரிய அளவில் தகவல்களும் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

Published by
ராம் சுதன்