ராயன் படத்தை முதலில் இயக்கவிருந்தது அவர்தானாம்!.. இது என்னப்பா டிவிஸ்ட்!..
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் இயக்கி நடித்திருக்கும் திரைப்படம் ராயன். இது தனுஷின் 50வது திரைப்படமாக வெளிவந்திருக்கிறது. இந்த படத்தில் தனுஷ் முக்கிய வேடத்தில் நடிக்க அவருடன் காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன் மற்றும் துஷரா விஜயன் ஆகியோர் நடித்திருக்கிறார்.
ஒருபக்கம் வில்லன்களாக எஸ்.ஜே.சூர்யா மற்றும் சித்தப்பு சரவணன் ஆகியோர் கேங்ஸ்டர் கும்பல் தலைவராக நடித்திருக்கிறார்கள். பிரச்சனையில் சிக்கும் இரண்டு தம்பிகள் மற்றும் தங்கைக்காக தனுஷ் என்ன செய்கிறார் என்பதுதான் படத்தின் ஒன்லைன். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருக்கிறார்.
இரண்டு கேங்ஸ்டர் கும்பலுக்கு இடையே சிக்கும் தனது குடும்பத்திற்காக தனுஷ் என்ன செய்கிறார் என்பதுதான் படத்தின் கதை, ரவுடிசம், கொலை, கற்பழிப்பு என பல காட்சிகள் இப்படத்தில் இடம் பெற்றிருக்கிறது. ராயன் படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் நல்ல வசூலை பெற்று வருகிறது.
படம் வெளியாகி 4 நாட்கள் ஆகியுள்ள நிலையில் இந்தியாவில் இப்படம் 40 கோடியில் உலக அளவில் 50 கோடியும் வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. எனவே, படத்தை வெற்றி பெறச்செய்த ரசிகர்களுக்கு நன்றி சொல்லி தனுஷ் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டிருக்கிறார்.
ராயன் படத்தில் தனுஷின் அண்ணன் செல்வராகவனும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். நடிப்பு சொல்லி கொடுத்த அண்ணனையே இயக்கி இருக்கிறார் தனுஷ். இந்நிலையில், இந்த படத்தை முதலில் இயக்கவிருந்ததே செல்வராகவன்தானாம். அதாவது, தனுஷின் கதை, திரைக்கதையை செல்வராகவன் இயக்குவது என முடிவானது.
ஆனால், செல்வராகவன் இயக்கினால் அது வட சென்னை அது புதுப்பேட்டை 2 போல வந்துவிடும் என பயந்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் பின் வாங்கியிருக்கிறது. அதன்பின்னரே இப்படத்தை தனுஷே இயக்குவது என முடிவெடுத்தார் என செய்திகள் கசிந்திருக்கிறது.