விஜய்கிட்ட என்ன கேட்டாலும் கிடைக்கும்.. ஆனா இது மட்டும் நடக்காது! இப்படி ஒரு பாலிசியா?
தமிழ் சினிமாவில் ஒரு மாஸ் நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். இப்போது அரசியலில் தனது முழு கவனத்தையும் செலுத்த ஆரம்பித்திருக்கிறார். அவர் நடிக்கும் 69ஆவது திரைப்படம் தான் விஜயின் கடைசி படம் என்று சொல்லப்படுகிறது. அந்த படத்திற்குப் பிறகு முற்றிலுமாக சினிமாவிற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு முழு நேர அரசியல்வாதியாக தனது பொது சேவையை ஆரம்பிக்கிறார்.
இதன் முதல் கட்ட பணியாக சமீபத்தில் தான் பெரிய அளவில் மாநாடு ஒன்றை நடத்தினார் விஜய். பல லட்சம் பேர் கூடிய அந்த மாநாட்டில் அவர் பேசிய பேச்சு அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்திருக்கிறது. மாநாட்டிற்கு பிறகு நேற்று தன் கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து முதல் பொதுக்குழு கூட்டத்தை கூட்டி அதில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இப்படி அடுத்தடுத்து சரவெடியாக மாறி வருகிறார் விஜய். இந்த நிலையில் விஜய் பற்றி அவருடைய நீண்ட நாள் நண்பரும் சின்னத்திரை நடிகருமான சஞ்சீவ் பல தகவல்களை பகிர்ந்திருக்கிறார். கல்லூரியில் படிக்கும் பொழுது விஜய்க்கு நடனம் கற்றுக் கொடுத்ததே சஞ்சீவ் தானாம். ரஜினியின் பாடலான ராக்கு முத்து ராக்கு என்ற பாடலுக்கு மேடையில் நடனம் ஆடினார்களாம்.
அந்தப் பாடலுக்கு டான்ஸ் கற்றுக் கொடுத்தது நான்தான் என அந்த பேட்டியில் சஞ்சீவ் கூறி இருக்கிறார். விஜய்க்கு நடனமே ஆட தெரியாது. நான் தான் அவனுக்கு டான்ஸ் கற்றுக் கொடுத்தேன் என கூறினார். மேலும் 25 வருட இந்த நட்பில் விஜயின் எல்லா படங்களிலும் நான் நடித்திருக்கலாம்.
ஆனால் ஒரு சில படங்களில் மட்டும் தான் நடித்திருப்பேன். ஏன் விஜய் வாய்ப்பு கொடுக்கவில்லை என்று பல பேர் தன்னிடம் கேட்டார்கள். அதற்கு ஒரே ஒரு காரணம் எங்களுக்குள் போடப்பட்ட அந்த அக்ரிமெண்ட் தான் என சஞ்சீவ் கூறி இருக்கிறார். விஜயுடன் சேர்ந்து அவருடைய நண்பர்கள் மொத்தம் ஆறு பேர். அந்த ஆறு பேருமே பர்சனலாக எந்த ஒரு உதவி வேண்டுமானாலும் கேட்கலாம்.
ஆனால் தொழில் சார்ந்து எந்த ஒரு உதவியும் கேட்கவும் கூடாது செய்யவும் கூடாது என ஒரு அக்ரீமெண்ட் போட்டு இருக்கிறார்களாம். அது மட்டுமல்ல எனக்கு திடீரென பணம் வேண்டும். ஏதாவது பண பிரச்சனை என்றால் தாராளமாக 100% வந்து விஜய் உதவி பண்ணுவான் .
ஆனால் எனக்கு சான்ஸ் வாங்கி கொடு .வாய்ப்பு கொடு என்று கேட்டால் அது மட்டும் நடக்காது. நானும் அப்படித்தான். என்னுடைய நண்பர்களும் அப்படித்தான். அப்படிப்பட்ட ஒரு பாலிசியை தான் நாங்கள் போட்டிருக்கிறோம் என சஞ்சீவ் அந்த பேட்டியில் கூறி இருக்கிறார்.