Cinema News
பின்னாடி இருந்து நோண்டிக்கிட்டே இருந்தாங்க.. தனுஷ் பற்றி நடிகை சொன்ன விஷயம்
இன்று தமிழ் சினிமாவே வியக்கும் அளவுக்கு வளர்ந்து இருக்கிறார் நடிகர் தனுஷ். துள்ளுவதோ இளமை படத்தில் மீசை வளராத இளவயது ஹீரோவாக அறிமுகமாகி இன்று அனைத்து இளைஞர்களுக்கும் ஒரு முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறார் தனுஷ். துள்ளுவதோ இளமை படத்தில் ஏகப்பட்ட விமர்சனங்களுக்கு ஆளானார். ஏனெனில் இளசுகளுக்கான படமாக இருந்ததனால் ஃபேமிலி ஆடியன்ஸ் முதல் படத்திலிருந்து தனுஷ் மீது வெறுப்பை கக்கினார்கள் .
அதிலிருந்து அடுத்தடுத்து காதல் ரொமான்டிக் போன்ற படங்களிலேயே நடித்து அப்பொழுதும் அவருக்கு என ரசிகர்கள் குறைவாகத்தான் இருந்தார்கள். பொல்லாதவன் திரைப்படம் தான் அவருடைய கெரியரை மாற்றிய திரைப்படமாக அமைந்தது .வெற்றிமாறன் வருகைக்கு முன் வருகைக்குப் பின் என தனுஷின் சினிமா கேரியரை பிரித்து பார்க்கலாம். தொடர்ந்து வெற்றிமாறனுடன் ஐந்து படங்களில் சேர்ந்து நடித்த தனுஷ் இன்று ஒரு ஆக்சன் ஹீரோவாக கமர்சியல் ஹீரோவாக வளர்ந்து நிற்கிறார்.
நடிகராக மட்டுமல்ல இயக்குனராகவும் தொடர்ந்து படங்களை இயக்கி வருகிறார் .சிறந்த நடிகர் என்ற பெயரை எடுத்து விட்டார். அதைப்போல சிறந்த படைப்பாளி என்ற பெயரையும் வாங்கும் முயற்சியில் இப்போது தனுஷ் ஈடுபட்டு வருகிறார். சமீப காலமாக அடுத்ததாக அஜித்தை வைத்து தனுஷ் ஒரு படத்தை இயக்கப் போகிறார் என்ற ஒரு செய்தி பரவி வருகிறது. அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் அந்த படம் ஒரு சிறந்த படமாக இருக்கும் என கோடம்பாக்கத்தில் கூறி வருகிறார்கள்.
தற்போது இட்லி கடை படத்தை இயக்கி இருக்கிறார் .அதை முடித்துவிட்டு இப்போது ஹிந்தியில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தின் படிப்பில் தான் தனுஷ் இப்போது கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் சின்னத்திரை நடிகை கேப்ரியல்லா தனுஷை பற்றி ஒரு தகவலை பகிர்ந்து இருக்கிறார். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்த திரைப்படம் 3. இந்த படத்தில் சின்ன குழந்தையாக ஸ்ருதிஹாசன் உடனே டிராவல் செய்யும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் கேப்ரியல்லா.
அந்த படத்திற்குப் பிறகு தனுஷை அண்மையில் மதுரை விமான நிலையத்தில் தான் பார்த்தாராம் கேப்ரியல்லா. அப்போது விமானத்தில் கேப்ரியல்லா பக்கத்தில் ஒரு இளைஞன் உட்காருந்து இருக்க பின்னாடி இருந்து ஒருவர் அந்த இளைஞனை நோண்டிக்கொண்டே இருந்தாராம் .இது கேப்ரியல்லாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தி இருக்கிறது .சரி என ரெஸ்ட் ரூம் போய்விட்டு வரும்பொழுது பின் இருக்கையில் ஒருவர் தொப்பி அணிந்தவாறு புத்தகம் படித்துக் கொண்டிருந்தாராம் .

அவரை ஃபோக்கஸ் செய்து பார்த்தபோது கேப்ரியல்லாவுக்கு ஒரே அதிர்ச்சி. ஏனெனில் அது தனுஷ். நமக்கு பின்னாடி தனுஷ் உட்கார்ந்து இருக்காரா என சந்தோஷத்தில் என்ன செய்வது என்று அவருக்கு தெரியவில்லையாம் .பேசலாமா வேண்டாமா என யோசித்துக் கொண்டே இருந்தாராம் கேப்ரியல்லா. அதன் பிறகு சரி பேசி பார்ப்போம் என தனுஷை அழைத்து என்னை ஞாபகம் இருக்கிறதா என கேட்டாராம். தனுஷும் மறக்காமல் அந்த படத்தில் நடித்தவர் தானே என 3 படத்தை நினைவுப்படுத்தி இவரை பற்றியும் இவர் குடும்பத்தை பற்றியும் நலம் விசாரித்தாராம் ல்நல்லா பண்ணுங்க என சொல்லிவிட்டு சென்றாராம் தனுஷ்ல்